அரசியலுக்கு வந்திருந்தா எனக்கு 100% வெற்றி.. விஜய் மீது பொறாமை இல்லை.. அரசியலைத் தாண்டி ஸ்டாலினுடன் நட்பு.. – ரஜினி

அரசியலுக்கு வந்திருந்தா எனக்கு 100% வெற்றி.. விஜய் மீது பொறாமை இல்லை.. அரசியலைத் தாண்டி ஸ்டாலினுடன் நட்பு.. – ரஜினி

அரசியலுக்கு வந்திருந்தா எனக்கு 100% வெற்றி.. விஜய் மீது பொறாமை இல்லை.. அரசியலைத் தாண்டி ஸ்டாலினுடன் நட்பு.. – ரஜினி

 

 

இன்று மே 17.. தன் மீது வைக்கப்பட்ட பல அரசியல் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்… அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்..

 

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நான் சந்தித்து பேசியனேன்.. எங்களது நட்பு, அரசியலுக்கு அப்பாற்பட்டது.

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். இருப்பினும், சென்னை கொளத்துாரில் ஸ்டாலின் தோற்றது, எனக்கு வருத்தமாக இருந்தது.அதனால், நண்பர் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்தேன்.

விஜய் முதல்வராவதை தடுக்க ஸ்டாலினை பார்த்ததாகவும், இரண்டு பெரிய கட்சிகளை இணைக்க நான் சென்றதாகவும் விமர்சனங்கள் வெளியாகின

.அந்த சூழலில், அதை பேசும் அளவிற்கு தரங்கெட்ட ஆள் ரஜினி இல்லை.

இரண்டாவதாக, விஜய் வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்து கூறவில்லை என்றனர். தேர்தலில் விஜய் வெற்றி பெற்றவுடன், ‘எக்ஸ்’ தளத்தில் நான் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளேன்.

அண்மையில் பெங்களூரு செல்லும் போது மீடியா ; யாரும் இல்லை.. திடீரென ஒருவர் மொபைல் போனுடன் வந்து, ‘விஜய் முதல்வராகி விட்டார்’ என்றார். நான் பதிலளிக்காமல் சிரித்துக் கொண்டே சென்று விட்டேன்.

அதற்கு, ‘வாழ்த்து சொல்லவில்லை; விஜய் மீது எனக்கு பொறாமை’ என்றனர்.

நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். அரசியலில் இல்லாத போது, நான் ஏன் விஜய் மீது பொறாமைப்பட வேண்டும்?எனக்கும், விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது.. விஜய் என்னை விட 25 வயது இளையவர்..

விஜயை என்னுடன் ஒப்பிடுவதும், என்னை விஜயுடன் ஒப்பிடுவதும் நல்லதல்ல. சிறு வயதில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். அவர் மீது எனக்கு என்ன பொறாமை?

 

விஜய் தன் 52 வயதில் முதல்வராகி, எம்.ஜி.ஆர்., – என்.டி.ஆர்., சாதனைகளை விட அதிக சாதனை படைத்துள்ளார்

மத்தியில் பா.ஜ., மற்றும் இங்குள்ள இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து, தனி ஆளாக வென்றுள்ளார்; அதுவும் சினிமா துறையிலிருந்து வந்து செய்து காட்டியுள்ளார். அதில், எனக்கு பொறாமை இல்லை; ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.

விஜய் மீது இளைஞர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என, மூன்று பக்க அறிக்கையில் தெளிவாக சொல்லி விட்டேன்; 2001 ல் நான் அரசியலுக்கு வந்திருந்தால், 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன்… அதில் சந்தேகம் இல்லை..

விஜய் மீது எதிர்பார்ப்பு உள்ளது அவரது ரசிகர்கள் தொண்டர்கள் ஏதேனும் தவறு செய்தால் அது விஜய் பாதிக்கும்.. எனவே அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.. ” என்று தெரிவித்தார் ரஜினிகாந்த்.

 

Rajini open statement about CM Vijay and his politics