தயாரிப்பாளர் K. ராஜன் தற்கொலை..; முதல்வர் விஜய் – வைரமுத்து இரங்கல் கவிதை

தயாரிப்பாளர் K. ராஜன் தற்கொலை..; முதல்வர் விஜய் – வைரமுத்து இரங்கல் கவிதை

 

தயாரிப்பாளர் K. ராஜன் தற்கொலை..; முதல்வர் விஜய் – வைரமுத்து இரங்கல் கவிதை

 

பிரபல தயாரிப்பாளர் நடிகரும் இயக்குனரமான கே. ராஜன் சென்னை அடையார் ஆற்றில் நேற்று மே 17 மாலை 5 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்..

இவரின் மறைவு பலருக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.. எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் தைரியமாக பேசக்கூடியவர்.. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருந்துள்ளது..

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்..

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான கே. ராஜன் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திரைப்படத் துறையின் நலன், குறிப்பாக சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கு குறித்து தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் கே.ராஜன். பல தசாப்தங்களாக திரைப்படத் துறையுடன் நெருங்கிப் பயணித்த அவரது பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை. அவரது பங்களிப்பை திரைத்துறை என்றும் நினைவில் வைத்திருக்கும்.

கே. ராஜனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், தமிழ் திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

—–

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தயாரிப்பாளர் கே.ராஜனின் முடிவு எதிர்பாராதது மற்றும் நம்ப முடியாதது..

துணிச்சல் வெளிப்படைத் தன்மை அறச்சீற்றம் உள்ள ஒருமனிதன் எப்படி இப்படி முடிவெடுத்தான்?. மொத்தம் மரணம் மூன்று வகை:

“இயல்புச் சாவு என்பது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு.

கொலை என்பது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

தற்கொலை என்பது மனிதன் சமூகத்தின்மீது காட்டும் எதிர்ப்பு”

இந்தத் தற்கொலை சமூகத்தில் எதை எதிர்த்துவிட்டுப் போயிருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும் . தற்கொலைகளுக்கு நான் மலர்மாலை வைப்பதில்லை ஆனால், இரங்காமல் இருப்பதுமில்லை. ராஜன் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cm Vijay and Vairamuthu condolence message for K Rajan

 

 

Related articles