‘ஒற்றைப் பனை மரம்’ விமர்சனம்..: ஈழத்தின் ஈரம் ..

‘ஒற்றைப் பனை மரம்’ விமர்சனம்..: ஈழத்தின் ஈரம் ..

 

 

ஒற்றைப் பனை மரம்.. விமர்சனம்..

 

ஸ்டோரி…

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் அங்கு நடந்த சம்பவங்களை இந்த ஒற்றைப் பனைமரம் சொல்கிறது.

அங்கு வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தப் படம் அலசி இருக்கிறது..

ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களால் பிரச்சனை இல்லை.. தமிழனுக்கு தமிழனே பிரச்சனை என்பதை இந்த படம் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது..

 

கலைஞர்கள்…

ஈழத்தில் உருவான ‘மண்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புதியவன் ராசய்யா, எழுதி, இயக்கி, சுந்தரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

புதியவன் ராசய்யா இந்த படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. இவர் தத்தெடுத்துக் கொண்ட மகளாக அஜாதிகா என்பவர் நடித்திருக்கிறார்..

அஜாதிகா என்ற பெயரும் அதற்கான காரணமும் ரசிக்கும் வகையில் உள்ளது.. ஜாதிகள் இல்லாத பெண் என்பதை குறிப்பிடும் சொல்லாக இந்த பெயர் வைக்கப்பட்டதாக இயக்குனர் சொல்லி இருப்பது சிறப்பு..

கதையின் நாயகியாக பெண் போராளி கஸ்தூரி கேரக்டரில் நவயுகா என்பவர் நடித்திருக்கிறார்..

போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வாடும் அப்பாவி கைம்பெண்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திப் பணிய வைக்கும் பணக்கார தமிழர்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

போருக்கு பின்னர் வேறு எந்த வேலையும் கிடைக்காத ஆண் போராளிகள் அடியாள்களாக அமர்த்தப்படுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

எந்த கமர்சியலும் இல்லாத யதார்த்த நடிப்பு அவர்களின் வாழ்வியலை அடையாளப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

Ottrai Panai Maram movie review