Mani and Lokesh for Amaran : மலர் டீச்சர் அண்ணா சொன்னாங்க.. துப்பாக்கிய வாங்கிட்டாரு.. AK பற்றி SK பேச்சு
Mani and Lokesh for Amaran : மலர் டீச்சர் அண்ணா சொன்னாங்க.. துப்பாக்கிய வாங்கிட்டாரு.. அஜித் பற்றி சிவகார்த்திகேயன் பேச்சு
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’.
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.
அமரன் படம் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது. இதில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை சொல்லும் விதமாக மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் நடிக்க அவரது மனைவி இந்துவாக நடித்துள்ள சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று அக்டோபர் 18ஆம் தேதி இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினரை பாராட்டி பேசினார்.
அதன் பின்னர் லோகேஷ் பதில் அளிக்கும் போது..
நானும் சிவகார்த்திகேயனும் நீண்ட வருடங்களாக இணைந்து பணிபுரிவது குறித்து பேசி வருகிறோம்.. விரைவில் அது நடைபெறும் என தெரிவித்த மேலும் அதான் துப்பாக்கிய வாங்கிட்டாருல என்று விஜய்யின் ‘கோட்’ பட காட்சி நினைவுபடுத்தி பேசினார்.. இதனை அடுத்து அரங்கத்தில் கரகோஷம் ஒலித்தது..

இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது நாயகி சாய் பல்லவி மற்றும் அவரது பிரேமம் பட மலர் டீச்சர் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
நான் ‘பிரேமம்’ படத்தைப் பார்த்த பின் உங்களைப்போல நானும் மலர் டீச்சரின் ரசிகனாக மாறிவிட்டேன்.. பொதுவாக பள்ளிகளில் டீச்சரை பார்த்தாலே மாணவர்கள் ஓடுவார்கள்.. ஆனால் மலர் டீச்சரை பார்த்ததும் மாணவர்கள் குஷியாகி விட்டார்கள்.
நான் ஒரு வழியாக சாய்பல்லவி நம்பர் பெற்றுக் கொண்டு அவரிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.. நான் சிவகார்த்திகேயன் பேசுகிறேன் என சொல்லிவிட்டு படத்தில் மலர் டீச்சர் மற்றும் அவரது அறிமுக கட்சி ஆகியவற்றை குறிப்பிட்டு பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் ஒவ்வொரு முறையும் பாராட்டும் போது தேங்க்யூ அண்ணா நன்றி அண்ணா என்று பேசிக்கொண்டே இருந்தார்.
இருங்க இருங்க.. இப்ப நான் சாய் பல்லவி கிட்ட பேசல.. மலர் டீச்சர் கிட்ட தான் பேசுற அந்த படத்துல வர காட்சி மாதிரி நீங்க எல்லாத்தையும் மறந்துடுங்க என்று நான் சொன்னேன்.
இறுதியாக நாம் ஒருநாள் இணைந்து பணிபுரிய வாய்ப்பு உண்டு என்று சொல்லி இருந்தேன்.. தற்போது அது இந்த ‘அமரன்’ படத்தில் நடந்தேறி இருக்கிறது.
ஒருமுறை நான் நடிகர் அஜித்தை சந்தித்தேன்.. அப்போது அவர் சொன்ன முதல் வார்த்தை..வெல்கம் டு பிக் லீக் என்று சொன்னார்.. எனக்கு புரியவில்லை மீண்டும் என்ன என்று கேட்டேன்..
உங்கள் வளர்ச்சியை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள் என்றால் நீங்கள் Big League பிக் லீகல் இணைந்து விட்டீர்கள் என்றார் சிவகார்த்திகேயன்
இந்த விழாவில் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்தினம் பேசும்போது..
சிவகார்த்திகேயன் படிப்படியாக தன்னுடைய knowledgeஜை உயர்த்திக் கொண்டு தற்போது ஆக்ஷன் ஹீரோ மாறி இருக்கிறார்.
சாய் பல்லவிக்கு தான் ரசிகன் என்றும் விரைவில் அவருடன் இணைந்து செயல்பட தான் விரும்புவதாகவும் பேசினார்.
Malar Teacher Thank you Anna Sivakarthikeyan speech at Amaran event



