Keerthy at Unicef – அமிதாப் – சச்சின் – பிரியங்கா வரிசையில் இணைந்த கீர்த்தி
Keerthy at Unicef – அமிதாப் – சச்சின் – பிரியங்கா வரிசையில் இணைந்த கீர்த்தி
இந்தியாவில் குழந்தைகள் நலனுக்காக உதவிகளை செய்து வருகிறது யுனிசெஃப் அமைப்பு… இத்துடன் இணைந்து பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் குழந்தைகளின் நலனுக்காக உதவி வருகின்றனர்..
இதுவரை அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் கரீனா கபூர் ஆகியோர் இந்திய யுனிசெஃபின் தூதராக இருக்கின்றனர்.
இந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்..

இது தொடர்பாக பேசிய அவர்…
“இந்தியாவில் குழந்தைகளுக்கான தூதராக யூனிசெஃபில் இணைவதில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாகவும் கற்றுக் கொள்ளவும் பெரிய கனவு காணவும் தகுதியானது. இதை சாத்தியமாக்க யுனிசெஃப், இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளாக உழைத்து வருகிறது..
மேலும் குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நிறைய வாய்ப்புகள் கிடைப்பதற்கு அரசுடனும் பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்று வருகிறது..
Keerthy Suresh Becomes UNICEF India’s Celebrity Advocate for Child Rights
—-

