சூப்பர் ஸ்டாருக்குள்ள சூப்பர் ஆக்டர்.. அமிதாப் ஃபர்ஸ்ட்.. ரஜினி லாஸ்ட்.. – ஞானவேல்

சூப்பர் ஸ்டாருக்குள்ள சூப்பர் ஆக்டர்.. அமிதாப் ஃபர்ஸ்ட்.. ரஜினி லாஸ்ட்.. – ஞானவேல்

 

 

சூப்பர் ஸ்டாருக்குள்ள சூப்பர் ஆக்டர்.. அமிதாப் ஃபர்ஸ்ட்.. ரஜினி லாஸ்ட்.. – ஞானவேல்

 

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராணா ரகுபதி பகத் பாசில், மஞ்சு வாரியார் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ரோகினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’ நாளை அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது..

 

இந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் படத்தின் சில சுவாரசியமான சம்பவங்களை கூறியிருக்கிறார்.. அதில்

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்துக்குள் மறைந்திருக்கிறார்.. ஆனால் அவருக்குள் சூப்பர் ஆக்டர் என்றுமே நிறைந்திருக்கிறார்.. அவரின் முள்ளும் மலரும் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்.. எனவே தான் கெட்ட பையன் சார் இந்த காளி என்ற வார்த்தையை படத்தின் பாடலில் பயன்படுத்த சொன்னேன்.

சூப்பர் ஆக்டரை கொண்டுவரும் முயற்சியாக இந்த வேட்டையன் படத்தை இயக்கி இருக்கிறேன்..

இதில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் இருவரும் 30 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளனர்.

அமிதாப்பச்சன் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட் போல சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்பே ஸ்கிரிப்ட் வாங்கிக்கொண்டு வசனங்களை பேசி பயிற்சி செய்து சூட்டிங் தளத்திற்கு வருவார்.

ஆனால் ரஜினிகாந்த் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் போல ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த பின் ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கி வசனங்களை ரிகர்சல் செய்து சில நிமிடங்களிலேயே ஷூட்டிங்கில் மேஜிக் செய்து விடுவார்” என தெரிவித்துள்ளார்..

நாளை வெளியாக உள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளாக 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Gnanavel speaks about Rajini and Amitabh acting in Vettaiyan