சுகாதார சவால்களில் புதுமை.. ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’.. பிரசாந்த் மருத்துவமனையை வாழ்த்திய கே.எஸ் ரவிக்குமார்
சுகாதார சவால்களில் புதுமை.. ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’.. பிரசாந்த் மருத்துவமனையை வாழ்த்திய கே.எஸ் ரவிக்குமார்
சிக்கலான இதய அடைப்பு பிரச்சினைகளுக்கு
தென் சென்னையில் முதல் முறையாக பிரசாந்த் மருத்துவமனையில் நவீன
‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அறிமுகம்
சிக்கலான இதய நோயாளிளுக்கு பெரிய அறுவை சிகிச்சை இல்லாமல் ‘எக்ஸைமர் லேசர் கரோனரி அதெரெக்டமி’ என்ற புதிய சிகிச்சை மூலம் வலியில்லாத எளிய முறை சிகிச்சை
சென்னை, ஜூலை 17,2026:தென்னிந்தியாவின் முன்னணி சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றான பிரசாந்த் மருத்துவமனை, இன்று தனது வேளச்சேரி கிளையில் ‘ELCA’ எனப்படும் அதிநவீன லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் சென்னையில் இந்த வசதியைக் கொண்ட முதல் மருத்துவமனையாகவும், சென்னையில் இரண்டாவது மருத்துவமனையாகவும் இது திகழ்கிறது.
இதன் மூலம் சிக்கலான இதய அடைப்பு உள்ள நோயாளிகள், பெரிய அறுவை சிகிச்சைகள் இல்லாமல், தங்கள் வீட்டிற்கு அருகிலேயே விரைவாக சிகிச்சை பெற்று விரைவில் வீடு திரும்ப முடியும். இந்த புதிய வசதியை திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் துர்வாசல் மற்றும் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
சிகிச்சையின் சிறப்பம்சங்கள்:
மிகவும் கடினமான இதய அடைப்புகளைச் சரிசெய்யும் வகையில் இந்த ELCA தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியாத அடைப்புகள் மற்றும் ரத்தக் கட்டிகளை, ELCA எக்ஸைமர் லேசர் கரோனரி அதெரெக்டமி தொழில்நுட்பம் ஒரு சிறப்பு புற ஊதா லேசர் கதிர்களைப் பயன்படுத்தி இது துல்லியமாகக் கரைத்து நீக்குகிறது. நாள்பட்ட அடைப்புகள், அதிக ரத்தக் கட்டிகளால் ஏற்படும் மாரடைப்பு, ஊடுருவ முடியாத கடினமான அடைப்புகள் மற்றும் முன்பு வைக்கப்பட்ட ஸ்டெண்டுகள் சரியாக விரியாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
கை மணிக்கட்டு அல்லது தொடைப் பகுதியில் ஒரு சிறிய ஊசி மூலம் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் நோயாளிகள் மிக விரைவாகக் குணமடைவதுடன், 24 மணி நேரத்திற்குள் எழுந்து நடக்கவும் முடியும். மேலும், ஒரு சில நோயாளிகளுக்கு ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சைக்குப் பதிலாக இந்த எளிய சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

பிரசாந்த் மருத்துவமனையின் மேம்பட்ட இதய சிகிச்சை முறையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ‘இன்ட்ரா வாஸ்குலர் லித்தோட்ரிப்ஸி’ மற்றும் ‘ரொடேஷனல் அதெரெக்டமி’ போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் ELCA-வும் இணைவதால், சிக்கலான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையின் கட்டமைப்பு முழுமையடைகிறது. இதன் மூலம், ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப தகுந்த சிகிச்சையை அளித்து, சிறந்த மருத்துவ முடிவுகளை வழங்க மருத்துவர்களுக்கு இது உதவுகிறது.
இந்த புதிய வசதியைத் தொடங்கி வைத்து, திரைப்பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில்..
“இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாக இதய நோய் மாறிவிட்டது. மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே சுருங்கிவிடக் கூடாது. உலகத் தரம் வாய்ந்த இதய சிகிச்சையை தென் சென்னை மக்கள் எளிதாகப் பெறும் வகையில், பிரசாந்த் மருத்துவமனை இதுபோன்ற அதிநவீன சிகிச்சை முறையை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த மருத்துவ சேவையின் மூலம் உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவக் குழுவினரின் தொடர்ச்சியான பணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்..
இந்நிகழ்ச்சியில் பிரசாந்த் மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் துர்வாசல் பேசுகையில்,”இதய நோய்கள் நாளுக்கு நாள் மிகவும் சிக்கலானதாக மாறி வருகின்றன. எந்த இரண்டு இதய அடைப்புகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பெரும்பாலான நோயாளிகளுக்கு சாதாரண ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை சிறப்பாக செயல்பட்டாலும், சிலருக்குச் சிறந்த சிகிச்சை பலன்களைப் பெற சிறப்புத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. மிகவும் கடினமான இதய அடைப்புகளையும் பாதுகாப்பாகச் சரிசெய்யவும், ரத்த ஓட்டத்தைத் துல்லியமாகச் சீரமைக்கவும், சில நோயாளிகளுக்குப் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்கவும் இந்த ‘எக்ஸைமர் லேசர் கரோனரி அதெரெக்டமி’ உதவியாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவசர காலங்களில், இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே மேம்பட்ட இதய சிகிச்சையை சரியான நேரத்தில் பெற இந்தத் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. சிறந்த மருத்துவ நிபுணத்துவத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைத்து வழங்குவதே பிரசாந்த் மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். ELCA, மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் எங்களது திறனை மேம்படுத்துவதோடு, நோயாளிகளுக்கு வலியற்ற எளிதான சிகிச்சை, விரைவாகக் குணமடைதல் மற்றும் நீண்டகால நன்மைகளையும் உறுதி செய்கிறது.” என்றார்.

இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில்,
“நோயாளிகள் தங்கள் வீட்டை விட்டு வெகுதூரம் செல்லாமலேயே, அவர்களுக்கு மிகவும் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் கிடைப்பதை உறுதி செய்வதே பிரசாந்த் மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். உலகத் தரம் வாய்ந்த இதய சிகிச்சையைத் தென் சென்னைக்குக் கொண்டு வரும் எங்கள் பயணத்தில், இந்த ‘எக்ஸைமர் லேசர் கரோனரி அதெரெக்டமி’ அறிமுகம் மற்றொரு முக்கியமான ஒன்றாகும். இதய நோய்கள் தொடர்ந்து சிக்கலானதாக மாறி வரும் நிலையில், மருத்துவமனைகள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன், சிறந்த சிகிச்சை பலன்களை வழங்கத் தேவையான மருத்துவ நிபுணத்துவத்திலும் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இந்தப் புதிய வசதி, எங்களின் விரிவான இதய சிகிச்சை திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, மக்களுக்குத் தேவையான நேரத்தில், வலியற்ற, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது” என்றார்..
ஒருங்கிணைந்த வசதிகள்:
ELCA தொழில்நுட்பம் அறிமுகத்தின் மூலம், பிரசாந்த் மருத்துவமனை தனது மேம்பட்ட இதய சிகிச்சை முறையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதிநவீன ‘கேத் லேப்’கள், அனுபவம் வாய்ந்த இதய சிகிச்சை நிபுணர்கள் குழு மற்றும் ‘இன்ட்ரா வாஸ்குலர் லித்தோட்ரிப்ஸி’, ‘ரொடேஷனல் அதெரெக்டமி’ போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து, அனைத்து வகையான இதய அடைப்பு நோய்களுக்கும் முழுமையான மற்றும் நம்பகமான சிகிச்சையை மருத்துவமனை வழங்கி வருகிறது..
24 மணி நேர அவசரக் கால இதய சிகிச்சை சேவைகள் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் ஆதரவுடன், தென் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை சரியான நேரத்தில் கிடைப்பதை பிரசாந்த் மருத்துவமனை உறுதி செய்து வருகிறது. வேளச்சேரியில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனது மற்ற கிளைகளிலும் இந்த ELCA தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த பிரசாந்த் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
Elca Laser treatment launch at Prashanth Hospital Chennai

