ரஜினி மோதலை தவிர்த்த தனுஷ் – மம்மூட்டி..; ஆனாலும் ‘ஜெயிலர் 2’ உடன் மோதும் ‘டிரோன்ஸ்’
ரஜினி மோதலை தவிர்த்த தனுஷ் – மம்மூட்டி..; ஆனாலும் ‘ஜெயிலர் 2’ உடன் மோதும் ‘டிரோன்ஸ்’.
ரஜினிகாந்த் – மோகன்லால் – சிவராஜ்குமார் – எஸ் ஜே சூர்யா – விஜய் சேதுபதி – சுராஜ் வெஞ்சரமூடு – ரம்யா கிருஷ்ணன் – வித்யா பாலன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’.
இந்த திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.. இதே நாளில் தனுஷ் – மம்மூட்டி இணைந்து நடித்த ‘ஓம்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது..
ஆனால் ரஜினி படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியானவுடன் ‘ஓம்’ படத்தில் ரிலீஸ் தேதி ஒத்தி வைப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.. அதன்படி ஓம் திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது..
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் பல படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஆனாலும் களத்தில் குதிக்கிறது ட்ரோன்ஸ் என்ற திரைப்படம்.
இந்த படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
பன் பட்டர் ஜாம் படத்தின் இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ஜிஎம் மோர்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’..
இதில் நடிகைகள் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, பரிதாபங்கள் டிராவிட், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமா வாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..
இந்த நிலையில் ட்ரோன்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்… “நான் டெரர்… நீ எர்ரர்…” என்ற பாடல் வெளியாகி உள்ளது..
Drones movie clash with Rajinis Jailer 2

