ரஜினியின் ‘காலா’ பட வில்லன்.. ‘சமூக சேவகர்’ நடிகர் நானா படேகர் மரணம் 

ரஜினியின் ‘காலா’ பட வில்லன்.. ‘சமூக சேவகர்’ நடிகர் நானா படேகர் மரணம் 

 

ரஜினியின் ‘காலா’ பட வில்லன்.. ‘சமூக சேவகர்’ நடிகர் நானா படேகர் மரணம்

 

 

ஹிந்தி மற்றும் மராத்தி படங்களின் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நானா படேகர்.. 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் ஜொலித்தவர் இன்று அக்டோபர் 8ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார்..

நானா படேகர் கோவாவில் உயிரிழந்தார்..

“அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு 45 நிமிடங்கள் தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.. ஒன்று ரஜினியின் காலா.. ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரசியல்வாதியாக ஹரிதாதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்..

அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பாரதிராஜா இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் அர்ஜுன் உடன் இணைந்து நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்..

நானா படேகர் மறைவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி.. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், விஷால் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்..

 

சினிமா தவிர இவர் பல சமூக சேவைகளை செய்து இருக்கிறார்..

நானா படேகர் தனது எளிமையான வாழ்க்கை முறைக்கும், சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர். பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மறுசீரமைக்க அனுபூதி என்ற தொண்டு அமைப்பின் மூலம் நிதியுதவி வழங்கினார்.

பாட்ஷாலா திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற முழு சம்பளத்தையும் ஐந்து வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட ராஜ் கபூர் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சம் பரிசுத்தொகையையும் மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக முழுமையாக நன்கொடையாக அளித்தார்.

வறட்சியால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கும் அவர் நிதியுதவி செய்தார். 2015 ஆகஸ்டில் விதர்பா பகுதியைச் சேர்ந்த 62 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 வீதம் காசோலைகளை வழங்கினார். அதே ஆண்டு செப்டம்பரில் மராத்வாடாவின் லாத்தூர் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 113 விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்தார்.

2015 செப்டம்பரில், மராத்தி நடிகர் மகரந்த் அனாஸ்புரே உடன் இணைந்து நாம் ஃபவுண்டேஷன் (Naam Foundation) என்ற அமைப்பைத் தொடங்கினார். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், #IcareIsupport என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டு, மகாராஷ்டிரா வறட்சி நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்டுவதிலும் நானா படேகர் முக்கிய பங்காற்றினார்.

 

Legendary Actor Nana Patekar passed away

 

 

 

 

 

Related articles