மதயானைக் கூட்டம் & ராவண கோட்டம் படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மரணம்

மதயானைக் கூட்டம் & ராவண கோட்டம் படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மரணம்

 

மதயானைக்கூட்டம் & ராவண கோட்டம் படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மரணம்

 

‘மதயானை கூட்டம்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக அடையாளப்படுத்தப்பட்டவர் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

அதைத்தொடர்ந்து சில வருடங்களுக்குப் பிறகு சாந்தனு நடித்த ‘ராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கருவேல மரங்களை அழித்து மண்ணின் நீர்வள காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.

இவரது அடுத்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மதுரையில் ஒரு தயாரிப்பாளர் சந்தித்து கதை சொல்லி அங்கிருந்து சென்னை புறப்பட தயாராகியுள்ளார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.. அப்போது பஸ்ஸில் பேருந்தில் பயணம் செய்யும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார்..

மதயானை கூட்டம் இயக்குனர் திரு விக்ரம் சுகுமாரன் அவர்கள் நேற்று ஜூன் 1 இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக மதுரையில் காலமானார்.

இன்று அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு மாலை 3 மணி அளவில் சென்னை வீட்டில் இருந்து அருகிலுள்ள இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது..

விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு நடிகர் சாந்தனு  இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

முகவரி :

3/95, பெருமாள் கோவில் தெரு,
எல்லம்மன் பேட்டை பம்மத்து குளம்.
ரெட்ஹில்ஸ்,
திருவள்ளூர் – 600052

Location :

https://maps.app.goo.gl/18Pk9HkpQfpZZ4xa6

Director Vikram Sugumaran passed away