அந்த துணிச்சல் இருப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டார்..; ‘வேட்டையன்’ வெற்றி விழாவில் ஞானவேல் பேச்சு

அந்த துணிச்சல் இருப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டார்..; ‘வேட்டையன்’ வெற்றி விழாவில் ஞானவேல் பேச்சு

 

அந்த துணிச்சல் இருப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டார்..; ‘வேட்டையன்’ வெற்றி விழாவில் ஞானவேல் பேச்சு

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘வேட்டையன்’ படத்தை ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகி இன்று வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இது வரை ₹ 400 கோடி வசூலை நெருங்கி வந்துள்ளது.. இதனால் லைக்கா பட குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அக்டோபர் 20ஆம் தேதி இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் ஞானவேல், லைக்கா குழுவினர், ரித்திகா சிங், டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஒளிப்பதிவாளர் கதிர், எடிட்டர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஞானவேல் பேசும்போது…

‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க துணிச்சல் வேண்டும். அந்த தைரியத்துடன் நடித்ததால் தான் அவர் சூப்பர் ஸ்டார்.

‘வேட்டையன்’ படத்தை குடும்ப குடும்பமாக பார்த்து வருகிறார்கள்.. குடும்பத்தினர் கொண்டாடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் குழந்தைகளுடன் வருகிறார்கள்.. இதை நானே எதிர்பார்க்கவில்லை..

நான் உங்களில் ஒருவனாக மீடியாவில் இருந்து வந்தவன் தான்.. மீடியாவின் பலம் யானை பலம்.. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என பேசினார்.

வேட்டையன்’ நன்றி தெரிவிக்கும் விழாவில், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது..

Director Gnanavel speech at Vettaiyan success event

 

 

 

 

Related articles