Fans Power Purpose..; அந்தப் படங்களுக்கு அவார்ட் கிடைக்கல.. அதைப்பத்தி ஏன் பேசல.. – தனுஷ்

Fans Power Purpose..; அந்தப் படங்களுக்கு அவார்ட் கிடைக்கல.. அதைப்பத்தி ஏன் பேசல.. – தனுஷ்

 

Fans Power kku Purpose..; அந்தப் படங்களுக்கு அவார்ட் கிடைக்கல.. அதைப்பத்தி ஏன் பேசல.. – தனுஷ்

 

நடிகர் தனுஷ் ஏற்கனவே ஆடுகளம் & அசுரன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதை இரண்டு முறை பெற்று இருக்கிறார்.

சமீபத்தில் 22 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதிலும் தனுஷின் இரண்டு படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது..

கேப்டன் மில்லர் மற்றும் ராயன் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில் தனுஷ் இயக்கி நாயகனாக நடித்த ராயன் பட விருது சர்ச்சையானது..

2024 ஆம் ஆண்டில் ராயன் படத்தை விட சிறந்த படங்கள் வெளியானது.. ‘மகாராஜா’, ‘வாழை’, ‘மெய்யழகன்’ மற்றும் தங்கலான் உள்ளிட்ட படங்கள் வெளியானது.. அந்த படங்கள் சிறந்த படங்கள் இல்லையா? அதில் நடித்தவர்கள் சிறந்த நடிகர்கள் இல்லையா.? என பல்வேறு தரப்பிலும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

www.rightnewsraja.com

இந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் வருகிறது.. அதனை முன்னிட்டு இன்று ஜூலை 26 தனுஷ் ரசிகர்கள் சிறப்பு ரத்த தான முகாம் நடத்தினர்..

நடிகர் தனுஷ் கலந்துக் கொண்டு பேசினார்.. அவர் பேசும்போது தேசிய விருதுகள் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார்.. “ராயனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ராயன் வெளியான அதே வருடத்தில் பல நல்ல படங்கள் வெளியாகின. அந்த நடிகர்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அதை மதிக்கிறேன்.. நான் சின்ன பையனாக இருந்த போது ‘அது ஒரு கனாக்காலம்’ என்ற படத்தில் நடித்தமைக்கு அந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்றார்கள்.. நான் அப்போது சின்ன வயது என்பதால் அதை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்.. ஆனால் கிடைக்கவில்லை..

அதன் பிறகு புதுப்பேட்டை, வடசென்னை, மயக்கம் என்ன, 3, மரியான் போன்ற படங்களுக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் சொன்னார்கள் ஆனால் கிடைக்கவில்லை. அப்போது யாரும் ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என கேட்கவில்லை..

‘ராயன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது தானாக கிடைத்தது. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருது கிடைத்துள்ளது. தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்.” என்று பேசினார் தனுஷ்..

மேலும்.. இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு வந்து இருக்கு.. இந்தப் பவருக்கு ஒரு பர்பஸ் இருக்கணும்…ஏதோ வந்தோம்.. போட்டோ எடுத்தோம்.. பர்த்டே பார்ட்டி இல்ல ஆடியோ லாஞ்ச்ல கலந்துகிட்டோம்னு… அப்படி இருக்க கூடாது.. இந்த கூட்டம் ஒரு பாசிட்டிவான விஷயங்களுக்கு பயன்படனும்.. உங்க வீட்ல உங்க தெருவுல யாருக்காச்சும் உதவி தேவைப்பட்டால் அவங்களுக்கு சேவை செய்யணும்.. ஆக்கபூர்வமான விஷயங்களில் ரசிகர்கள் ஈடுபடனும்.. அதுதான் எனக்கு பெருமை” என்றும் பேசினார் தனுஷ்..

விழாவில் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தனுஷ்..

 

Dhanush speech about National award controversy

 


 

 

 

Related articles