டாப் டைரக்டர்ஸ்க்கு டப் கொடுக்கும் நடிகர் தனுஷ்.. செம குஷியில் ரசிகர்கள்
ஒரு பக்கம் கோலிவுட் ஹாலிவுட் பாலிவுட் என பல படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.. மறுபக்கம் ஒரு இயக்குனராகவும் அதிரடி வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
தனுஷ் இயக்கி நடித்த முதல் படமான பவர் பாண்டி மாபெரும் வெற்றி பெற்றது.. இதனை அடுத்து சமீபத்தில் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்திருந்தார் தனுஷ்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த ராயன் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வேட்டையாடியது.
மேலும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படமும் வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகும் தனது 52 வது படத்திற்கு ‘இட்லி கடை’ என வித்தியாசமாக பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை டான் பிசர்ஸ் நிறுவனம் &. தனுஷின் வுண்டர் பால் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இப்பட படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது.
இதில் தனுஷுடன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
சிறந்த நடிகராக பெயர் பெற்ற தனுஷ் தற்போது சிறந்த இயக்குனராகவும் பெயர் பெற்று வருகிறார்.. எனவே டாப் டைரக்டருக்கு இவர் பெரிய டப் கொடுக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்..
Dhanush 4th directorial movie titled Idly Kadai

