பத்தா விமர்சனம்.. 4/5..

பத்தா விமர்சனம்.. 4/5..

 

பத்தா விமர்சனம்.. 4/5

 

ஸ்டோரி…

ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடி பத்தா விஜய் சேதுபதி.. இவரின் அடிதடி வெட்டுக்களை பார்த்த வழிகளில் சிறுவன் சாய் பிரித்திவிராஜ் ஒருவன்..

ஒரு நாள் பள்ளி கோடை விடுமுறையில்.. அந்த ஸ்கூல் பாத்ரூமுக்கு செல்கிறார் விஜய் சேதுபதி.. (அவர் ஏன் அங்கு சென்றார் என்பதெல்லாம் சுவாரசியமான, ட்விஸ்ட்.) அப்போது மற்றொரு காரணத்திற்காக அந்த ஸ்கூலுக்கு வந்த சாய் பாத்ரூம் கதவை அடைத்து விட்டு பயத்தில் வெளியே வந்து விடுகிறான்..

கோடை விடுமுறை என்பதால் பள்ளி திறக்கும் வரை விஜய் சேதுபதி வெளியேற வாய்ப்பு இல்லை.. அதன் பிறகு என்ன செய்தார்.? அவரை யாராவது காப்பாற்றினார்களா அல்லது அங்கே அடைப்பட்டு கிடந்தாரா? என்பதெல்லாம் சுவாரசியமான திரைக்கதை…

கேரக்டர்ஸ்…

விஜய் சேதுபதி @ பத்தா
லிஜோமோல் ஜோஸ் @ கண்ணிமா
சாய் பிரித்வி ராஜ் @ சபரி
சஹஸ்ரா @ தேன்மொழி
அர்ஜுன் சிதம்பரம் @ ஜோதி
ஹரி கிருஷ்ணன் @ திருநாவுக்கரசு
சாண்டி பாலச்சந்தர் @ செல்வி
விஷ்ணு கோவிந்த் @ தில்லி
பாலமுருகன் @ துரை

நாயகன் – விஜய்சேதுபதி.. நாயகி – லிஜோ மோல்.. ரவுடியிசத்தில் விஜய் சேதுபதி ரணகளம் செய்து இருக்கிறார் என்றால் அவருக்கு போட்டியாக குடும்ப குத்து விளக்காய் அசர வைத்திருக்கிறார் லிஜோ..

பாத்ரூமுக்குள் மாட்டிக்கொண்ட ஒரு மாஸ் ஹீரோ.. நிச்சயம் எவரும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கேரக்டரை விஜய்சேதுபதி சவாலாக எடுத்து சிக்ஸர் அடித்திருக்கிறார்..

உங்களுக்கெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு எனக்கு எதுவுமே இல்ல ஆனாலும் நின்னு விளையாடுவேன்னு.. சாய் பிரித்திவிராஜ் ஒவ்வொரு கட்டத்திலும் சபாஷ் பெறுகிறார்..

பாத்ரூமுக்குள் பத்தாவை அடைத்து விட்டு அவர் காட்டும் ரியாக்ஷன்.. போலீஸ் விசாரிக்கும் போது திருட்டுமுழி.. குற்ற உணர்ச்சியால் தவிக்கும் எமோஷன்.. இந்த சிறுவனுக்குள் இத்தனை நவரச நடிப்பா என வியக்க வைக்கிறார்.?

மகளாக வரும் தேன்மொழி கேரக்டர் பெண்ணும்… பத்தாவின் நண்பர்களும் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர்…

டெக்னீசியன்ஸ்…

இசை: சாய் அப்யங்கர்

ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே
படத்தொகுப்பு: ஆர். கலைவாணன்

கலை இயக்குநர்: கண்ணன்.எஸ்
சண்டைப் பயிற்சி: ஸ்டன் சிவா, யு. பிருத்வி, கெவின் குமார்
நடன அமைப்பு: ராஜு சுந்தரம்
பாடல்கள்: கார்த்திக் நேத்தா, கே.கே. நகர் கானா ஜீவா, தமிழ்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

இயக்கம்: பாலாஜி தரணிதரன்
தயாரிப்பு: முராத் கெதானி  , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே

இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.. ஊரோட ஒத்த டான், மகளே பாடல்கள் பட்டைய கிளப்பு..

கலை இயக்குநர் கண்ணன்.எஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே.. 1985 காலகட்டங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.. சைக்கிள் முதல் மெட்ரோ மாக்ஸ் லைட்.. கலர்ஃபுல் ஆடைகள்… முக்கியமாக ஆரஞ்சு கலர் கனகாம்பரம் பூ.. பல காட்சிகளில் கொண்டு வந்துள்ளனர்..

டைரக்டர் அட்லி அவரது மனைவி பிரியா அட்லீ இணைந்து தயாரித்துள்ளனர்.

பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.. ஒரு கேங்ஸ்டர் கதை என்று முதலில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்குள் இருக்கும் நிறைவேறாத ஆசையை கிளைமாக்ஸில் வைத்து படத்தை கலகலப்பு ஆக்கி இருக்கிறார்..

ஒரு ரவுடியை பூட்டிப்போட்ட சிறுவன்… ஒரு வித்தியாசமான சிந்தனையில் மலையாள சினிமாவை போல ஒரு தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்…

 

Baththa movie review