ஆரகன் விமர்சனம்.. என்றென்றும் இளமை

ஆரகன் விமர்சனம்.. என்றென்றும் இளமை

 

 

 

ஆரகன் விமர்சனம்.. என்றென்றும் இளமை

 

‘ஆரகன்’ என்றால் கள்ளன் கபடம் என்ற பொருள் உண்டு என இயக்குனர் அருண் தெரிவித்தார்..

ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிப்பில், மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி நடிப்பில் அருண் கே .ஆர் இயக்கத்தில் இன்று வெளியான படம் ‘ஆரகன்’..

மன்னர்கள் வாழ்ந்த வந்த காலத்தில் வரைபடத்துடன் கதை தொடங்குகிறது.. அதில் முனிவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய சீடருக்கு என்ன வரவேண்டும் கேள் என்கிறார்.. நான் என்றும் இளமையாக இருக்க வேண்டும்.. என வரம் கேட்கிறார்..

சில நிபந்தனைகளுடன் வரம் கொடுக்கிறார் முனிவர்.. அது என்ன என்று தெரியாத கட்டத்தில் கதை இந்த காலகட்டத்திற்கு நகர்கிறது..

 

ஸ்டோரி…

நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா காதலர்கள்.. நாயகி கவி பிரியாவுக்கு பெற்றோர்கள் இல்லை.. எனவே அவரை திருமணம் செய்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை..

இந்த சூழ்நிலையில் வயதான பெண்மணி ஸ்ரீரஞ்சனியை பராமரிக்க கவிப்பிரியாவுக்கு வேலை வருகிறது.. இதன் மூலம் நிறைய பணம் கிடைத்தால் தன் காதலனுக்கு உதவலாம்.. புதிதாக தொழில் தொடங்கலாம் என எண்ணி அந்த வேலைக்கு ஒப்புக்கொள்கிறார்.

ஆனால் ஸ்ரீ ரஞ்சனி இருக்கும் இடமோ யாருமே இல்லாத ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பங்களா.. அங்கு செல்போன் டவர் கூட கிடைக்காத இடமாக இருக்கிறது.. ஆனாலும் சம்பளம் அதிகம் காரணமாக ஒப்புக்கொண்டு அங்கு செல்கிறார் கவி.. அங்கு சென்ற பின்னர் தான் அங்கு ஒரு முகம் பார்க்க கண்ணாடி கூட இல்லை கண்ணாடியை பார்க்கும் அனுமதி இல்லை என நிபந்தனை விதிக்கிறார்.

இந்தக் கட்டத்தில் தான் கவிப்பிரியாவுக்கு திடீரென முதுமை வருகிறது.. அவருடைய முகம் கூட எப்படி மாறி இருக்கிறது என்று தெரியாத சூழ்நிலையில் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? இளமையில் திடீரென முதுமை வர என்ன காரணம்? ஸ்ரீரஞ்சனி யார்? மைக்கேல் யார்?இவர்களுக்கெல்லாம் என்ன தொடர்பு என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

நல்ல உடற்கட்டு ஸ்மார்ட்டான பையன் மைக்கேல் தங்கராஜ்.. இதில் அலட்டிக் கொள்ளாமல் கவிப்பிரியாவுடன் டூயட் பாடி அசத்து இருக்கிறார்.. இரண்டாம் பாதியில் இவரது கேரக்டரில் வரும் திருப்புமுனை எதிர்பாராத ஒன்றாகும்.. அதுவே படத்தின் ஹைலைட்.. ஆனால் படக்குழுவினரின் நன்மை கருதி சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் இங்கே குறிப்பிடவில்லை

கவிப்பிரியாவின் கேரக்டர் மகிழ்நிலா.. இவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒரு நடிகை.. மகிழ்நிலா என்ற பெயருக்கு ஏற்றவாறு எப்போது மகிழ்ச்சியாகவும் புன்னகையுடன் காணப்படுகிறார்.. மேலும் நிலவைப் போன்ற முகத்துடன் ரசிக்க வைக்கிறார்..

திடீரென இளமை குறைந்து முதுமை அடையும் போது இவரது உடல் மொழியிலும் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி உண்டு..

இவர்களுடன் ஸ்ரீரஞ்சனி & கலைராணி உள்ளிட்ட சில கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.. கலை ராணி ஓவர் ஆக்டிங் இல்லாமல் அடக்கி வாசித்து இருப்பது சிறப்பு.

டெக்னீசியன்ஸ்…

படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை படத்தொகுப்பு அனைத்தும் பாராட்டுக்கு உரியவை..

பெரும்பாலும் வித்தியாசமான படங்களில் சில லாஜிக் மீறல்கள் இருக்கும்.. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல.. அதே சமயம் வித்தியாசமான முயற்சியை கிளைமாக்ஸ் வைத்து நம்மை அடடா இப்படியும் இருக்கிறதா? என வியக்க வைக்கின்றனர்..

ஒரு போஸ்ட்மெண்ட் வரும் காட்சியில் கவிப்பிரியாவுக்கு பின்னால் இருக்கும் ஸ்ரீரஞ்சனியை பார்த்து போஸ்ட்மேன் சார் என்று அழைக்கும் போது அதில் கொஞ்சம் கூட கவிப்பிரியாவுக்கு சந்தேகம் வரவில்லையா? (கவிப்பிரியாவுக்கு பெண்ணாக தெரியும் அவர் போஸ்ட்மேனுக்கு மட்டும் ஆணாக தெரிந்திருப்பார்.)

 

வசனங்கள் படத்திற்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்.. ஒரு காட்சியில் காதலன் காதலியே முத்தமிட்ட பிறகு அடுத்த நாள் காதலி வாந்தி எடுப்பாள்.. அப்போது கவிப்பிரியாவை பார்த்து.. ஏண்டி நேத்து நான் முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்.. அதுக்குள்ள வாந்தி எடுத்துட்ட.. ஒருவேளை எனக்கு அவ்வளவு பவர் இருக்கா?என்று கேட்பார்.. இது காதலர்களின் கிண்டலைச் சொல்லும்.

அதுபோல அடுத்த காட்சியில் எப்போதும் நம்மை சுற்றி இருக்கும் பொருள்கள் பாசிட்டிவான எண்ணம் கொண்டவையாக இருக்க வேண்டும்.. அப்பொழுது தான் நமக்கும் நல்ல எண்ணங்கள் உருவாகும்… நம்ம சுற்றியுள்ள படங்கள் பொருட்கள் நெகட்டிவாக இருந்தால் நமது எண்ணங்களும் நெகட்டிவாக மாறிவிடும் என்று சொல்வார்.. அதற்கு ஏற்ப கலை இயக்குனரும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்..

முதலில் சொல்லப்பட்ட இளந்தரை முனிவர் கதை பின்னால் வரும் காட்சிகளுடன் முடிச்சு போட்டிருப்பது திரைக்கதையின் சிறப்பு..

ஆக ஆரகன்.. என்றென்றும் இளமை

Aaragan movie review