ஆரோமலே விமர்சனம் 4/5.. மேட்ரிமோனி திருமணத்தில் நடந்த மேஜிக்
ஆரோமலே விமர்சனம் 4/5.. மேட்ரிமோனி திருமணத்தில் நடந்த மேஜிக்
ஸ்டோரி..
மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் நாயகன் கிஷன் தாஸ்.. இவரின் டீம் லீடர் ஷிவாத்மிகா.. மன்த்லி டார்கெட்டை முடிக்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்..
இவர் சந்திக்கும் ஒரு பெண் காதலித்த பையனை கரம் புடிக்க மேட்ரிமோனி தளத்தில சில தவறுகளை செய்து அந்த பையனுடன் பெண்ணை இணைத்து வைக்க முயற்சிக்கிறார்.. இதனை கண்டுபிடிக்கிறார் ஷிவாத்மிகா.. இதனால் இருவருக்கும் பிரச்சனை வருகிறது..
இதை ஒப்புக் கொள்ளும் கிஷன் தாஸ் நாயகி ஷிவாத்மிகாவிடம் ஒரு சவால் விடுகிறார்.. இங்கே தினமும் காத்திருக்கும் 55 வயது ஆகியும் திருமணமாகாத VTV கணேஷுக்கு உன்னால் திருமணம் செய்து வைக்க முடியுமா? என கேட்கிறார்.. உன்னால் முடியுமா.? என மறு சவால் விடுகிறார் ஷிவாத்மிகா..
இதனை எடுத்து விடிவி கணேசுக்கு யார் திருமணம் செய்து வைத்தார்கள்.? கணேஷ் மணக்க எந்த பெண் துணிந்து வந்தார்.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.


கேரக்டர்ஸ்…
கிஷன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா இருவரும் நடிப்பில் போட்டி போட்டுக் கொண்டு ஸ்கோர் செய்கின்றனர்.. சினிமா ரீல் டயலாக் பேசி காதல் வசியம் செய்ய முயற்சிக்கிறார் கிஷன் தாஸ்.. ஆனால் எதார்த்த அன்பை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்ணாக சிவாத்மிகா..
ஸ்டில்ஸ் பாண்டியன், துளசி, ஹர்ஷத் கான், மேகா ஆகாஷ், நம்ரிதா உள்ளிட்டோர் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கவனத்தை ஈர்க்கின்றனர்
கிஷனின் நண்பனாக வரும் (குட்டி டிராகன்) ஹர்ஷத் கான் கிடைத்த கேப்பில் எல்லாம் டைமிங் காமெடியில் ஸ்கோர் செய்கிறார்.. டைமிங் டயலாக் விட உடல் மொழி காமெடியிலும் இவர் கவனம் எடுத்தால் இன்னும் உயரலாம்..
55 வயதாகியும் திருமணமாகாத VTV கணேஷ் பேச்சுலர்களின் வலியை உணர வைக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
சித்துகுமார் இசையில் பாடல்கள் சிறப்பு.. காதலர்களை கவரும் கவித்துவமான பாடல்களை கொடுத்திருக்கிறார்.. பின்னணி இசையிலும் செம..
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்..
இயக்குனர் சாரங் தியாகு.. இவர் நடிகர் தியாகுவின் மகன் ஆவார்.. இவரின் முதல் படம் இயக்கம் என்றாலும் முதிர்ச்சியான திரைக்கதையில் முத்திரை பதிக்கிறார்.. மேட்ரிமோனி அலுவலகம் அதன் திட்டமிடல் செயல்களில் இத்தனை இருக்கிறதா என வியக்க வைக்கிறார்..

ஆரோமலே என்ற இந்த தலைப்பை மாற்றி இருக்கலாம்.. காரணம் பெரும்பாலும் இது பலருக்கு புரியவில்லை.. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் ஒரு சொல்லாகும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் படம் என்பதால் சிம்புவின் வாய்ஸ் ஓவரில் படம் தொடங்கி முடிகிறது.. இதுவும் படத்திற்கு ஒரு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது..
Aaromaley movie review

