ராஜா வீட்டு கன்னு குட்டி விமர்சனம்… காதலியா.? மனைவியா.? கன்பியுஷனில் காதல் கணவன்

ராஜா வீட்டு கன்னு குட்டி விமர்சனம்… காதலியா.? மனைவியா.? கன்பியுஷனில் காதல் கணவன்
ஸ்டோரி..
சிங்கப்பூர் சென்று வந்த நாயகன் பெண் கிடைக்காமல் வரன் தேடி வருகிறார்.. இந்த நிலையில் இவரது நெருங்கிய நண்பன் தனது தங்கையை நாயகனுக்கு மனம் முடித்து வைக்கிறார்.. அவரது மனைவி 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்..
அப்போது நாயகனின் முன்னாள் காதலி தேன்மொழி மகன் மரணம் அடைந்து விடுவதாக தெரிவிக்கிறார்.. ஆனால் இறந்த குழந்தை தேன்மொழிக்கு மட்டும் மகன் அல்ல உனக்கு மகன்தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார் நண்பன்.
இதனை தெரிந்து கொண்ட மனைவி இனி உன்னோடு வாழ மாட்டேன் என்று வெறுத்து விரட்டுகிறார்..
நாயகன் என்ன செய்தார்.? நாயகனின் குழந்தை என்றால் இருவருக்கும் உள்ள தொடர்பு என்ன.? இதை நண்பன் மறைத்து வைத்தது ஏன்.? இதன் பின்னணி என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாயகனாக ஆதித் சிலம்பரசன்.. ஆட்டம் பாட்டம் ஆக்ஷன் என அதிரடி கிளப்பினாலும் ரொமான்டிக்கில் போதிய மெச்சூரிட்டி இல்லை..
நாயகனின் நண்பனாக வருபவர் பாடி ஸ்மார்ட் இவரது உடல் மொழியும் இவரது மீசை.. ஹேர் ஸ்டைலும் கவர்கிறது..
தேன்மொழி.. நாயகியாக காயத்ரி.. இவரது முக வெட்டும் இளமையும் அந்த மாடு மேய்க்கும் கேரக்டருக்கு செட் ஆகவில்லை.. ஆனால் கிராமத்து பாஷையில் கொஞ்சம் முயற்சித்திருக்கிறார்..
நாயகனின் மனைவியாக நடித்திருப்பவர் அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. தேன்மொழி அக்காவின் முதல் முத்தம் குறித்து இவர் பேசும் போது அந்த முத்தத்திற்காக அவர் ஏங்கும் முதலிரவு காட்சியில் உதட்டழகில் வசீகரிக்கிறார்..
டெக்னீசியன்ஸ்….
டைசன் ராஜு என்பவர் இசையமைத்திருக்கிறார்.. முதல் படத்திலேயே இசைத் தளபதி என்ற பெயர் கொஞ்சம் ஓவர் தான்..
சிங்காரி என் கனவு நிசம் தாண்டி… என்ற பாடல் ரசிக்கலாம்.. ‘அதாண்டா ஊருக்குள்ள அழகான பொண்ணு… குத்து பாட்டு… ஆட்டம் போட வைக்கிறது
ஏபி ராஜு என்பவர் இயக்கியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி சேது படத்தை நினைவு படுத்துகிறது.. ஆனால் அந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..
ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்ற இந்த தலைப்பிற்கு இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று இயக்குனருக்கே தெரியும் போல.??
காயத்ரி ஆதித் சிலம்பரசன் இருவரும் பிரிந்தது ஏன்? இவர் திடீரென்று சிங்கப்பூர் எப்படி சென்றார் என்பதற்கு அந்த காட்சியும் விளக்கமும் படத்தில் இல்லை.. அதுவே ஒரு பெரிய குறையாக காணப்படுகிறது..
நண்பனுக்கு ஏற்கனவே காதல்.. காதலியுடன் உடலுறவு.. குழந்தை இருக்கிறது என்று தெரிந்த பின்னரும் நண்பன் தங்கையை முடித்து வைக்க என்ன காரணம் என்ற காட்சியும் இல்லை…
Raja veetu Kannu kutty movie review