படையாண்ட மாவீரா விமர்சனம்.. அரசியல் ஆட்டத்திற்கு துணை

படையாண்ட மாவீரா விமர்சனம்.. அரசியல் ஆட்டத்திற்கு துணை

 

படையாண்ட மாவீரா விமர்சனம்.. அரசியல் ஆட்டத்திற்கு துணை

 

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இது..

ஸ்டோரி…

அரியலூர் மாவட்டத்தில் வாழும் நாயகன் கௌதமன் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை சமூக சேவைகளை செய்து வருகிறார்.. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து எதிரிகள் உருவாக மோதலை உருவாக்குகிறது..

தவறு என்றால் அதிகாரத்தில் இருப்பவர்களையும் தட்டி கேட்கிறார்.. ஒரு முறை ஒரு பெண்ணிடம் அத்துமீறிய இன்ஸ்பெக்டரையும் அடித்து காவல் நிலையத்தை நொறுக்குகிறார்.

இது புதிதாக வந்த டி.எஸ்.பி. பாகுபலி பிரபாகருக்கு பெரும் தலைவலியை உண்டாக்குகிறது..

இந்த சூழ்நிலையில் அரசியலில் இறங்கி மக்கள் ஆதரவுடன் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் கௌதமன்.. சட்டமன்றத்திலும் அரசை தட்டி கேட்கிறார்.. இதனால் பல அரசியல்வாதிகளும் இவருக்கு எதிராக உருவெடுக்கிறார்கள்.. இறுதியில் என்ன ஆனது? என்பதே பரபரப்பான அரசியல் கதை..

கேரக்டர்ஸ்…

அதிரடி – ஆக்‌ஷனில் களமிறங்கி இருக்கும் கவுதமன், முடிந்ததை செய்ய முயற்சித்து வெற்றி கண்டுள்ளார்.

நாயகன் கௌதமன் இந்த காடுவெட்டி குரு கேரக்டருக்கு நன்றாகவே பொருந்தி போகிறார். அனல் பறக்கும் வசனங்களில் அதிரடி காட்டி இருக்கிறார்.. முக்கியமாக காவல் நிலையத்தை அடித்து நொறுக்கும் காட்சியில் மாஸ் காட்டிருக்கிறார்..

நாயகி பூஜிதாவுக்கு பெரியளவில் வேலை இல்லை.. நடிப்பை விட அழகை கவர்ச்சியை நம்பி இருக்கிறார்..

சமுத்திரக்கனிக்கு வழக்கமான ஆவேச வசனங்கள் பேசும் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது..

சரண்யா பொன்வன்னனின் நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் உள்ளிட்டோரும் உண்டு..

இதில் இளவயது கௌதமனாக நடித்த நபர் நல்ல சிறப்பான தேர்வு..

டெக்னீசியன்ஸ்…

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு விறுவிறுப்பை கூட்டுகிறது.

பாடல்களில் ஜி.வி.பிரகாசின் இசை கவனிக்க வைக்கிறது.. பாடல்களும் ரசிக்க வைக்கிறது.. சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசை அரசியல் களத்திற்கு அரசியல் படத்திற்கு சிறப்பான கூட்டணி..

வைரமுத்துவின் வரிகளில் ‘பட்டாம்பூச்சி’ பாடல் பட்டையை கிளப்பியிருக்கிறது..

காடுவெட்டியின் கதை அரசியல் களம் என்பதால் படத்தில் பல வீர வசனங்களை கேட்க முடிகிறது.. பல உணர்வுபூர்வமான காட்சிகளையும் ரசிக்கலாம்..

பெரும்பாலும் அரசியல் களத்தில் பார்த்த காட்சிகளே வருவது சோர்வை தருகிறது..

தன்னுடைய அரசியல் பயணத்தில் இந்த படையாண்ட மாவீரனை ஒரு கருவாக பயன்படுத்தி இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான கௌதமன்..

 

Padaiyaanda Maaveera movie review