KISS விமர்சனம்… பேண்டஸி லவ் ஸ்டோரி

KISS விமர்சனம்… பேண்டஸி லவ் ஸ்டோரி

 

KISS விமர்சனம்… பேண்டஸி லவ் ஸ்டோரி

 

ஸ்டோரி…

காதலை வெறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் காதல் வயப்படுகிறார்.. இதனிடையில் அவருக்கு ஒரு அதிசய புத்தகம் கிடைக்கிறது.. அந்த புத்தகம் இவரது கையில் கிடைத்த பிறகு அபூர்வ சக்தி கிடைக்கிறது.. காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டால் அவர்கள் எதிர்காலம் இவர் கண் முன்னே தெரிகிறது.. இதனையடுத்து சில காதலர்களை பிரித்து விடுகிறார்.

இப்படியான சூழ்நிலையில் இவருக்கு காதல் வரும்போது என்ன நடந்தது.?என்பதை சுவாரசியமாக பேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார் டைரக்டர் சதீஷ் கிருஷ்ணன்..

கேரக்டர்ஸ்…

படத்திற்கு படம் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்து கலக்கி வருகிறார் கவின்..

அயோத்தி படத்தில் பார்த்த ப்ரீத்தி.? என ஆச்சர்ய நடிப்பை கொடுத்துள்ளார் மாடர்ன் பெண்ணாக ப்ரீத்தி அஸ்ரானி..

தனது ஒன்லைன் காமெடியால் படத்தை கலகலப்பாகி இருக்கிறார் விடிவி கணேஷ். திருமண மண்டபத்தில் நடக்கும் ஒரு காட்சியில் சரவெடி சிரிப்பலை தான்.

ஆர்.ஜே.விஜய், தேவயானி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்..

சொல்லப்போனால் ஆர்ஜே விஜய் & விடிவி கணேஷ் வரும் காட்சிகள் காமெடிக்கு கேரண்டி..

டெக்னீசியன்ஸ்…

ஹீரோவின் கைக்கு புத்தகம் கிடைப்பதும் அதன் பின்னர் வரும் பேண்டஸி சுவாரஸ்யம்.. தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை மூலம் கவனம் பெறுகிறார் இயக்குனர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி..

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக கண்களுக்கு விருந்தளிக்கிறது.. ஜென் மார்ட்டின் பின்னணி இசை பலம்… பாடல்களும் கை கொடுக்கிறது..

சீரியஸ் மோடில் பயணிக்கும் திரைக்கதை ஹீரோயின் எண்ட்ரிக்கு பிறகு ரொமான்ஸ்க்கு மாறுவதால் இரண்டும் கலந்த ஒரு உணர்வை தருகிறது திரைக்கதை..

மன்னர் காலக்கதையை விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரில் இயக்குனர் கொடுத்திருப்பது படத்தில் மீதான எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது..

 

KISS movie review