சக்தித் திருமகன் விமர்சனம்… அரசியல் புரோக்கர்ஸ் – ஆடு புலி ஆட்டம்

சக்தித் திருமகன் விமர்சனம்… அரசியல் புரோக்கர்ஸ் – ஆடு புலி ஆட்டம்

 

சக்தித் திருமகன் விமர்சனம்… அரசியல் புரோக்கர்ஸ் – ஆடு புலி ஆட்டம்

 

ஸ்டோரி…

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் புரோக்கராக வேலை பார்க்கிறார் விஜய் ஆண்டனி.. முதலமைச்சரை நெருங்க முடியாதபடி மந்திரிகளிடம் டீலிங் பேசுகிறார்.. அனைத்து காண்ட்ராக்ட்க்கும் அனுமதி வழங்க இவரை சார்ந்து அனைத்து வேலைகளும் தலைமைச் செயலகத்தில் நடக்கிறது..

ஒரு கட்டத்தில் இவரது சதித்திட்டங்கள் அனைத்தும் டெல்லி அரசியல் புரோக்கரான காதல் ஓவியம் பட நடிகர் சுனிலுக்கு தெரிய வருகிறது.

₹ 6 ஆயிரம் கோடி அளவிற்கு விஜய் ஆண்டனி ஊழல் செய்திருப்பதை அறிந்து கொள்கிறார் சுனில்.. அதன் பிறகு இரண்டு புரோக்கர்களுக்கும் நடக்கும் அரசியல் சதுரங்க வேட்டை தான் இந்த ‘சக்தித் திருமகன்’..

கேரக்டர்ஸ்…

விஜய்ஆண்டனி, திரிப்தி ரவீந்திரா, செல்முருகன், வாகை சந்திரசேகர்,  காதல் ஓவியம் சுனில்

கிட்டு என்ற கேரக்டரில் கில்லியாக அரசியல் புரோக்கராக அசத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி.. இவர் போடும் ஒவ்வொரு ஆபரேஷனும் அடடே அசத்தல் ரகம்.. அரசியல் ப்ரோக்கர் என்றால் மாமா புரோக்கர் வேலை செய்யாமல் இருப்பாரா அதையும் செய்கிறார்.. ஹீரோ இமேஜ் பார்க்காமல் விஜய் ஆண்டனி இதை செய்திருப்பது ஒரு சேலஞ்ச் தான்..

காதல் ஓவியம் படத்தில் கண்ணனாக பல ரசிகர்களை கவர்ந்த சுனில் இந்த படத்தில் மீண்டும் மிரட்டி இருக்கிறார்.. அரசியல் புரோக்கர் இப்படி இருப்பாரா என்பது போல நடிப்பில் மிரள வைத்திருக்கிறார்..

ஹீரோயின் திரிப்தி ரவீந்திரா.. இவருக்கு திருப்தியாக இருந்ததா தெரியவில்லை.. நமக்கு திருப்தியாக இல்லை..

விவேக்குடன் பல படங்களின் அடித்த செல்முருகன் இந்த படத்தில் குணச்சித்திர கேரக்டர் ஏற்று செய்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்….

விஜய் ஆண்டனி கார்ப்பரேசன்

இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : ஷெல்லி

ஒளிப்பதிவும் பின்னணியை இசையும் படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறது..

இயக்கம்: அருண்பிரபு புருஷோத்தமன்

‘அருவி, வாழ்’ படத்துக்குபின் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கிறார்.

கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் ஹீரோ அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கும் நல்லவனாக காட்டியிருக்கிறார்.. படம் அரசியல் சார்ந்த கதை என்பதால் பலரும் அரசியல்வாதிகள் போல பேசிக்கொண்டே இருக்கிறார்கள் பேச்சை குறைப்பதை எடிட்டர் கவனித்திருக்கலாம்..

அரசியல் களம் பல தமிழ் படங்கள் வந்திருந்தாலும் இதில் அரசியல் புரோக்கரை பற்றி சொல்லி வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கிறார்..

 

Sakthi Thirumagan movie review