தண்டகாரண்யம் விமர்சனம்.. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை
தண்டகாரண்யம் விமர்சனம்.. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை
ராமாயணத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் தண்டகாரண்யம் என பொருள்..
ஸ்டோரி…
‘கெத்து’ தினேஷ் & கலையரசன் இருவரும் சகோதர்கள்..மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்காக போராடும் சமூக ஆர்வலர் தினேஷ்..
வனப்பகுதி காவல்துறையில் பணிபுரியும் கலையரசன் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் சேருகிறார்.. ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் இவர் கலந்து கொள்ளும் போது தான் இவருக்கு ஓர் உண்மை தெரிய வருகிறது..
அதாவது இந்த பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள் நாடு முழுவதும் உள்ள நக்சலைட்டுகளை ஒழிப்பார்கள் என தெரிய வருகிறது.. அதன் பின்னர் கலையரசன் & தினேஷ் என்ன செய்தார்கள்.? அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த ‘தண்டகாரண்யம்’.
கேரக்டர்ஸ்…
ரஞ்சித் இயக்கும் படம் என்றாலும் அவர் தயாரிக்கும் படம் என்றாலும் கலையரசன் & தினேஷ் நிச்சயம் இடம்பெறுவார்கள்.. அந்த வகையில் இதில் இருவரையும் சேர்த்து படத்திற்கு பெரிய பலம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர்..
‘கெத்து’ தினேஷ் பேசும் ஒவ்வொரு வசனமும் கெத்து தான்.. சீரியஸ் ரகமாக இவரது கேரக்டர் அமைந்திருந்தாலும் படத்தில் இவருக்கான மாஸ் காட்சிகள் ஏராளம்..
துணிச்சல் மிக்க இளைஞனாக கலையரசன் கலக்கியிருக்கிறார்.. உடல் மொழியில் குரல் மொழியில் அசத்தல்..
டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் இதில் அமிதாப் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.. அவரது கேரக்டர் பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டையும் கலந்த அதிரடி ரகம்..
பாலசரவணன், யுவன் மயில்சாமி, நாயகி வின்சு ரேச்சல் சாம், ரித்விகா உள்ளிட்டோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது..
டெக்னீசியன்ஸ்…
இளையராஜாவின் சூப்பர்ஹிட் 2 இரண்டு பாடல்களை சரியான இடத்தில் பொருத்தி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.. பின்னணி இசையில் வரும் ஒப்பாரி ஓஹோ ரகம்..
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.. காதல் காட்சிகளில் காடு சாந்தமாகவும் அதே காடு மற்ற நேரங்களில் நம்மை பயமுறுத்தும் என்று ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார்..
ஜார்க்கண்ட் முகாம் பயிற்சியில் கலையரசனுக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர்க்கும் இடையிலான மோதல் அனல் ரகம்..
இரண்டாம் உலகப் போர் கடைசி குண்டு என்ற முதல் படத்திலேயே தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர்..
2008 – 2009 ஆண்டில் இந்திய நாட்டில் நடந்த உண்மை சம்பவம் தொகுப்பாக மனதை தொடும் வகையில் உணர்வுபூர்வமாக இந்த தண்டகாரண்யம் படத்தை கொடுத்திருக்கிறார் அதியன் ஆதிரை..
பா ரஞ்சித் தன் நீலம் புடக்சன் சார்பாக தயாரிக்கும் படங்கள் எப்போதும் தரமானதாகவும் சர்ச்சையானதாகவும் அமையும்.. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல..
நக்சல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது அதிகார வர்க்கம் நடத்திய கொடூரத்தை இந்த படம் அப்பட்டமாக காட்டி இருக்கிறது… ரசிகர் மனதை ரணமாக்கும் காட்சிகளை வைத்து நம்மை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை..
Thandakaaranyam movie review

