மதராஸி விமர்சனம் 4/5… சீறும் சிங்கமாய் சிவகார்த்திகேயன் அடித்த சிக்ஸர்

மதராஸி விமர்சனம் 4/5… சீறும் சிங்கமாய் சிவகார்த்திகேயன் அடித்த சிக்ஸர்

மதராஸி விமர்சனம் 4/5… சீறும் சிங்கமாய் சிவகார்த்திகேயன் அடித்த சிக்ஸர்

 

 

ஸ்டோரி…

வட நாட்டைச் சேர்ந்த வில்லன்கள் வித்யுத் ஜம்வால் & ஷபீர் கல்லரக்கல் (‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ்).. இவர்கள் நண்பர்கள் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வந்து துப்பாக்கிகளை விற்பனை செய்ய முயல்கின்றனர்.. இதனை அறிந்து கொண்ட பிஜு மேனன் & விக்ராந்த் அதிரடிப்படையினர் இதை முறியடிக்க திட்டமிடுகின்றனர்..

இந்த சூழ்நிலையில் காதல் தோல்வியால் சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயல்கிறார்.. இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றும் முடியாத நிலையில் ஆஸ்பத்திரியில் பிஜு மேனனை சந்திக்கிறார். அப்போது அவரிடம் ஐடியா கேட்க… தன்னுடைய ஆபரேஷனில் சிவகார்த்திகேயனை தற்கொலை செய்ய வைத்து வில்லன்கள் திட்டத்தை முறியடிக்க முயல்கிறார்..

அதன் பிறகு என்ன ஆனது.? வில்லன்கள் மற்றும் அதிரடிப்படை திட்டத்தில் சிக்கிய சிவகார்த்திகேயன் என்ன ஆனார்.? காதலி மீண்டும் கிடைத்தாரா? தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்ததா.? சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த், தலைவாசல் விஜய்

ரகுராம் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன்… மாலதி என்ற கேரக்டரில் ருக்மணி வசந்த்..

இதுவரை நாம் பார்க்காத சிவகார்த்திகேயனை செதுக்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.. சீரும் சிங்கமாய் சிவகார்த்திகேயன் சிக்ஸர் அடித்திருக்கிறார்.. ஆக்ஷன் காட்சிகளை அசத்தியிருக்கிறார்..

குடும்பத்தை இழந்து தவிக்கும் சிறுவனாய் அவரின் கேரக்டரில் கொடுத்த எமோஷனும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. வெறி பிடித்த வேங்கையாக கிளைமாக்ஸ்சில் சிவகார்த்திகேயன் போடும் ஆட்டத்தில் அனல் பறக்கிறது..

பெரும்பாலும் மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயின் கேரக்டர் வொர்க் அவுட் ஆகாது.. ஆனால் படம் முழுக்க டிராவல் செய்யும் மாலதி கேரக்டரில் மலர்ந்திருக்கிறார்.. கவர்ச்சி இல்லாத நடிப்பிலும் அழகிலும் ருக்மணி கவர்கிறார்..

ஹீரோவுக்கு இணையான வில்லன் கேரக்டரில் வித்யூத் ஜமவால் தெறிக்க விட்டுள்ளார்.. துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான்தாண்டா என்று பேசிவிட்டு வித்யூத் போடும் ஃபைட் வேற லெவல் ரகம்..

பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த், தலைவாசல் விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் சரியான அளவில் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது..

டெக்னீசியன்ஸ்…

இயக்குநர் : ஏ.ஆர்.முருகதாஸ்

இசை : அனிருத்

ஒளிப்பதிவு : சுதீப் இளமோன்

படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்

சலாம்பலா பாடல் ஆட்டம் போட வைக்கிறது.. பாடல்களை விட பின்னணி இசையில் அதிரடி காட்டி இருக்கிறார் அனிருத்.. அதுவும் வில்லனுக்கு போடும் தீம் மியூசிக் தீயாய் பறக்கிறது..

அடடா அவ்வளவு சீக்கிரம் இடைவேளை வந்து விட்டதா என்று எண்ணம் அளவுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார் ஸ்ரீதர் பிரசாத்.. தேவையில்லாத காட்சிகள் எதுவும் இல்லையா என்றளவுக்கு செம எடிட்டிங்.

சுதீப் இளமோன் ஒளிப்பதிவில் கண்டெய்னர் காட்சிகள்.. ஹார்பர் காட்சிகள்.. குடும்பம் விபத்து காட்சிகள்.. இரவு நேர காட்சிகள் என அனைத்தும் கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது..

படத்தில் ஆக்ஷன் விருந்து வைத்த சண்டை பயிற்சி இயக்குனர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.. ஒவ்வொரு பைட்டும் ஒவ்வொரு ரகம்.. முக்கியமாக படம் ஆரம்பித்த பைட் சீன் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து.. கன்டெய்னர் லாரி சீறி பறக்க ஒவ்வொரு காரும் அடித்து பறக்கும் சீன் ஹாலிவுட்டுக்கு நிகரானது..

இனி இயக்குனர் முருகதாஸ் அவ்வளவு தான் என்று சொன்னவர்களுக்கு தன் டைரக்ஷன் மூலம் நான் மீண்டும் வந்துட்டேன் என மீசையை முறுக்கி இருக்கிறார் முருகதாஸ்..

வசனங்கள் நிறைய இடங்களில் கவனம் பெறுகிறது.. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனை பார்த்து ருக்மணி சொல்லும் வசனம்.. உனக்கு இருப்பது நோய் அல்ல.. நீ மக்களை ஒரு குடும்பமாக பார்க்கிறாய் என்று சொல்லும்போது நெகிழ வைக்கிறார்..

ஹீரோ கையில் எதுவுமே இல்லாத நேரத்தில் வில்லன்கள் அனைவரும் துப்பாக்கி வைத்துக் மோதும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை.. இது தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இப்படி தானா.?

வட இந்திய வில்லன்களை மிரட்டும் ஒரு சாமானியனாக சிவகார்த்திகேயன் காட்டினாலும் பிளாஷ் பேக் கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார்..

இடைவேளைக் காட்சியில் வில்லன் மற்றும் அதிரடிப்படையினரை கான்பரன்ஸ் காலில் பேச வைத்து சிவகார்த்திகேயன் செய்யும் செயல் தரமான சம்பவம்.. அதில் கொஞ்சம் காமெடி கலந்து கலக்கி இருக்கிறார் SK.

ஆக தமிழ்நாடு ஒரு அமைதி பூங்காவாக இருக்கும் வகையில் மதராஸி படத்தை கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்..

 

Madharaasi movie review