லோகா சேப்டர் – 1 சந்திரா விமர்சனம்… சுவாரஸ்யமான சூப்பர் ஹீரோயின் சந்திரா
லோகா சேப்டர் – 1 சந்திரா விமர்சனம்… சுவாரஸ்யமான சூப்பர் ஹீரோயின் சந்திரா
லோகா சேப்டர் – 1 சந்திரா
பொதுவாக இந்திய சினிமாவில் ஆக்ஷன் ஹீரோயின் சூப்பர் ஹீரோயின் என பல படங்களை பார்த்திருக்கிறோம்.. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் சூப்பர் ஹீரோயின் கதைகள் வருவதில்லை.. அதுவும் மலையாள சினிமாவில் இது போன்ற சூப்பர் ஹீரோயின் கதைகள் வருவதில்லை.. காரணம் மலையாள திரை உலகின் பட்ஜெட் தான் காரணம்.
ஆனால் தற்போது பிரபல நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஆக்சன் ஹீரோயின் ஆக சூப்பர் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் தான் இந்த ‘லோகா சேப்டர் – 1 சந்திரா’..
கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்க்கிறார்.. ஆனால் அவர் அங்கு பணிபுரிந்தாலும் வேறொரு பிராஜெட்டுக்காக வந்திருப்பதை அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது.
இவரது வீட்டுக்கு எதிரே நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் ஒன்றாக வசிக்கிறார்கள்.. இதில் நஸ்லனுக்கு கல்யாணி மீது காதல் வருகிறது… ஒருநாள் சில போதை ஆசாமிகள் கல்யாணியிடம் பிரச்னை செய்ய காப்பாற்ற நினைக்கிறார் நஸ்லன்..
அப்பொழுதுதான் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் அதீத சக்தி நிறைந்தவர் கல்யாணி என்பது தெரிய வருகிறது.. அது மட்டும் இல்லாமல் அவள் பறந்து பறந்து செல்வதும் மனிதர்களின் ரத்தத்தை குடிப்பது போன்ற செயல்களில் கல்யாணி ஈடுபடுவதும் இவருக்கு பேரதிர்ச்சியை தருகிறது.
அப்படி என்றால் கல்யாணி யார்.? அவரது பின்னணி என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ் அலசல்..
இயக்குநர் டோமினிக் அருண் இயக்கியிருக்கிறார்.. முதலில் நாம் தற்போதைய காலகட்டத்தில் பார்க்கும் சாதாரண கதையாக நிலவுகிறது.. திடீரென கல்யாணியின் பின்னணியை காட்டும் போது அதற்கான பிளாஷ் பேக் புராண கால கதைகளை வரைபடமாக காட்டும் போது நமக்கு அதை தெரிந்து கொள்ள ஆர்வம் கூடுகிறது.. மேலும் அதுவே இந்த படத்தில் ஆணிவேராக கதைக்களமாக இருப்பதை உணர முடிகிறது.
சூப்பர்ஹீரோ கதை என்பதால் லாஜிக்கை ரசிகர்கள் மறந்து விட்டு இந்த படத்தை ரசிக்கலாம்.. இடை இடையே நாயகன் நஸ்லன் மற்றும் அவரது நண்பர்களின் காமெடி களைகட்டி இருக்கிறது..
தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வகையில் வசனங்களும் இருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது..
பல படங்களில் வழக்கமான நாயகியாக நாம் பார்த்த கல்யாணியை இதில் ஆக்சன் ஹீரோயினாக பார்ப்பது சிறப்பு.. அந்த அழகு கண்களில் அக்ஷனை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..
நடிகர்கள் நஸ்லன், சந்து உள்ளிட்டோர் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்..
டான்ஸ் மாஸ்டர் சாண்டி போலீஸ் வில்லனாக நன்றாக நடித்திருக்கிறார்.. அவரது சேவிங் செய்த முகமும் இறுக்கமான நடிப்பும் படத்திற்கு பிளஸ்.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் VFX காட்சிகளும் படத்திற்கு நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளது.. பகலில் கல்யாணியின் சாகசங்கள் இடம்பெறாது என்ற சூழ்நிலையில் படத்தில் கதையை முழுவதும் இரவிலேயே நகர்த்தி இருப்பது இயக்குனர் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..

அது மட்டுமில்லாமல் கேரளாவில் இரவு வாழ்க்கை எப்படியாக அமைந்திருப்பது என்பதையும் காட்சிப்படுத்து உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கேமரா ரம்யமான காட்சிகளை காட்டியிருக்கிறது..
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை நம்மை அடுத்தது என்ன நடக்கும் என்ற பரபரப்பை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது..
கல்யாணி மற்றும் சிறப்பு தோற்றங்களில் வரும் துல்கர் சல்மான் – டோவினோ தாமஸ் – சௌபின் சாகர் பிரபலங்களின் ஆடைகள் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
துல்கர் சல்மான் தயாரிப்பில் இந்த லோகோ சப்டர் 1 சந்திரா என்ற கதைக்களத்துடன் படம் அமைந்துள்ளது.. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவர்ந்த நிலையில் இனி சாப்ட்டர் இரண்டு மூன்று வரிசைகளை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்
Lokah Chapter 1 Chandra movie review

