குற்றம் புதிது விமர்சனம்.. புதிய குற்றத்தில் புதிய யுக்தி..

குற்றம் புதிது விமர்சனம்.. புதிய குற்றத்தில் புதிய யுக்தி..

குற்றம் புதிது விமர்சனம்.. புதிய குற்றத்தில் புதிய யுக்தி..

 

ஸ்டோரி….

அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனராவ் இவரது மகள் சேஷ்விதா.. ஒரு நாள் நள்ளிரவில் வீடு திரும்பும் வேலையில் யாரோ ஒரு நபரால் கடத்தப்படுகிறார்.. இதனை அறிந்து காவல் துறையே பரபரப்பாகிறது.. இது பற்றிய விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் உணவு டோர் டெலிவரி செய்யும் நாயகன் தருண் விஜய்.. நான்தான் நாயகி சேஷ்விதாவை துண்டு துண்டாக வெட்டி கொன்றதாக வாக்குமூலம் கொடுத்து சரணடைகிறார்..

இதற்கு முன் இருவரை கொன்றதாகவும் சொல்கிறார்.. இந்த சூழ்நிலையில் போலீஸ் விசாரணையில் இறங்கும்போது அவர் கொன்றதாக கூறப்பட்ட இரு நபர்களும் உயிரோடு இருப்பதாக தெரிய வருகிறது.

மேலும் சேஷ்விதாவும் உயிரோடு திரும்பி வருகிறார்.. இதனால் போலீஸ் குழப்பம் அடைகிறது.. தருண் விஜய் சரணடைய என்ன காரணம்.? கொன்றதாக சொல்ல என்ன காரணம்.? கடத்தப்பட்ட நாயகி சேஷ்விதா எங்கிருந்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அறிமுக நாயகன் தருண் விஜய்.. நாயகியாக சேஷ்விதா கனிமொழி, மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் & மற்றும் பலர்..

அப்பாவி வாலிபன் மற்றும் சைக்கோ என இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் நாயகன் தருண் விஜய்.. நாயகி சேஷ்விதா எமோஷனல் காட்சிகளில் சபாஷ் பெறுகிறார்.. இவர் போடும் ஸ்கெட்ச் செம..

பொறுப்பான அப்பா.. கடமை தவறாத காவல் அதிகாரி என மதுசூதனராவ் தன் நடிப்பில் கவர்கிறார்..

 

டெக்னீசியன்ஸ்…

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய கரண் பி கிருபா இசையமைக்கிறார்..

கொலை செய்துவிட்டு நாயகன் சரண்டர் ஆகும்போது பின்னணி இசை திரில்லராக இல்லாமல் ரொமான்டிக்காக இருப்பது ஏனோ.?

அறிமுக இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் எழுத்து இயக்கத்தில், ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது..

அறிமுகப்படம் என்றாலும் மெச்சூரிட்டி திரைக்கதை அமைத்து ‘குற்றம் புதிது’ என்பதை புதிதாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங்.. ஆனால் சில காட்சிகளை பார்க்கும் போது விஜய் சேதுபதி & ரம்யா நடித்த பீட்சா பட நினைவு தான் வருகிறது..

 

குற்றம் என்பது கொடூரமானது.. அது பழையது ஆனால் அதை குற்றம் புதிதாக எப்படி சொல்ல முடியும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி அதை சுவாரசியமாக முடித்து இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்..

 

Kuttram Pudhidhu movie review