காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்… காத்துவாக்குல காதல் ஓரமான கலவரம்..
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்… காத்துவாக்குல காதல் ஓரமான கலவரம்..
சென்னை புரொடக்ஷன் எழில் இனியன் தயாரிப்பில் உருவான ‘காத்துவாக்குல ஒரு காதல்’
ஸ்டோரி…
நாயகன் & நாயகி காதலிக்கிறார்கள்.. இவர்களின் காதல் காட்சிகள் ஒரு பக்கம் இருந்து கொண்டிருக்க அடுத்த பக்கம் கேங்ஸ்டர் மோதல் ஓடிக்கொண்டிருக்கிறது..
ரவுடிகளை போட்டு தள்ளும் ஒவ்வொரு வன்முறை காட்சிகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.. ஒரு நாள் காதலி திடீரென கனவு காணும் போது காதலனை கொல்ல முயற்சி நடப்பதாக தெரிகிறது.. இதனை எடுத்து தனது காதலனுக்கு போன் செய்கிறார்..
உடனே போன் செய்து ஜீவா என்று அவர் சொல்ல.. இது ஜீவா நம்பர் இல்லை என்கின்றனர்.. இரண்டு மூன்று முறை போன் செய்தும் வேறு யாரோ எடுத்து திட்டுகின்றனர்.. சில தினங்களில் ரவுடியாக அவரை சந்திக்கிறார்.. அவர் தான் இவர் என்று லட்சுமி நினைத்தால் ஆனால் அது வேற ஆள் என்கிறார்..
அப்படி என்றால் ஜீவா யார்.? இவரை விட்டு விலக என்ன காரணம்.? என்ன காரணத்தினால் இப்படி நடக்கிறது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
– மாஸ் ரவி என்கிற ஜீவா – மாஸ்
– லட்சுமி பிரியா என்கிற மேகா
மஞ்சு என்கிற பல்லவி
லட்சுமி பிரியா & பல்லவி இருவரும் அழகுடன் திறமை வாய்ந்த நடிகைகள்..
ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை.. கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர்..
இவர்களுடன் வரும் கேங்ஸ்டர்ஸ் அனைவரும் மிரட்டல் ரகம்.. சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி.. ரவுடி பயிற்சி பெற்றவர்கள் போல அசத்தல்..

டெக்னீசியன்ஸ்…
இசை – ஜிகேவி & மிக்கின் அருள்தேவ்.. பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் அதிக இரைச்சல்.. தேவா குரலில் ஒலிக்கும் பாட்டு ரசிக்க வைக்கும்
ஒளிப்பதிவு – ராஜதுரை & சுபாஷ் மணியன்.. இரு காலங்கட்டங்களுக்கு ஏற்ப தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்
எடிட்டர் – கம்பம் மூர்த்தி & ராஜ்குமார்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு – எழில் இனியன்
இணை தயாரிப்பு – ராஜாத்தி எழில் இனியன்

நடிகர் & இயக்குனர் – மாஸ் ரவி
இவரை இயக்குனர் இவரை ஹீரோ என்பதால் இவரது கேரக்டர் படத்தில் பெரிய ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.. கொஞ்ச நேரம் சாந்தமாகவும் கொஞ்சம் முறை சரவெடியாகவும் வெடித்திருக்கிறார் மாஸ் ரவி.. சாந்தமான கேரக்டரை விட சரவெடி இவருக்கு பொருத்தம்..
மாஸ் ரவிக்கு மாஸ் ஆன காட்சிகள் இருந்தாலும் ரொமான்ஸ் போதவில்லை..
எடிட்டர் கூடுதல் காட்சிகளை கத்தரி போட்டு இருக்கலாம்.. குழப்பமான திரைக்கதைக்கு விடை எல்லாம் கிளைமாக்ஸ் இல் வருகிறது.. அதுவரை குழப்பமான மனநிலை இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை..
Kaathuvaakula Oru Kadhal movie review

