சென்னை பைல்ஸ் முதல் பக்கம் விமர்சனம்
சென்னை பைல்ஸ் முதல் பக்கம் விமர்சனம்
ஸ்டோரி…
மறைந்த ஒரு கிரைம் நாவல் எழுத்தாளரின் மகன் நாயகன் வெற்றி.. இவர் ஒரு பேட்டிக்காக ஒரு தொடர் எழுத சென்னைக்கு வருகிறார்.. அப்போது ஒரு திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் தம்பி ராமையா இவரை அழைத்து செல்கிறார்.. அவர் அந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் போது வெற்றியின் துப்பறியும் திறனை அறிந்து கொள்கிறார்..
எனவே நீ என்னுடன் இருந்தால் என்னால் அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க முடியும் என்கிறார்.. அதன்படி வெற்றியும் போலீஸ்க்கு உதவி வருகிறார்.
அப்போது சென்னையில் பல இடங்களில் தொடர் கொலைகள் நடக்கிறது.
இந்தக் கொலைகளை செய்யும் குற்றவாளி யார்.? அவனின் நோக்கம் என்ன.? போலீசுக்கு உதவும் வெற்றி என்ன செய்தார்.? எல்லா வழக்குகளை முடித்துக் கொடுத்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
தம்பி ராமையாவின் போலீஸ் கேரக்டர் தேவையில்லாத ஒன்று.. அவரை ஒரு சராசரி காட்டி இருக்கலாம்.. அதை விடுத்து அவரது போலீஸ் கேரக்டர் காமெடியாக இருக்கிறது..
சின்ன விஷயங்களைக் கூட நாயகன் வெற்றி சொல்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டது.. அதற்கு பதிலாக நாயகன் வெற்றியே போலீஸ் ஆக நடித்திருக்கலாம்.. ஒருவேளை அடர்ந்த தாடி வைத்த காரணமாக ஷேவிங் செய்ய மனம் இல்லாமல் நடித்தாரோ என்னவோ?


நாயகி ஷில்பா மஞ்சுநாத்.. நிருபராக வருகிறார்.. இவரும் சில காட்சிகளில் நாயகனுக்கு உதவுகிறார்.
வில்லன் கம்பீரமான உடலுடன் சண்டைக் காட்சிகளில் தெறிக்க விட்டுள்ளார்.. ஆனால் வழக்கமாக ஹீரோவிடம் அடி வாங்கி இறந்து போகிறார்..
தம்பி ராமையாவின் மகள்கள் கேரக்டர் படத்திற்கு ஒட்டவில்லை.. ஆனாலும் எக்ஸ்ட்ரா ஒரு கிளை கதை வேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டதாக தெரிகிறது..

டெக்னீசியன்ஸ்…
சட்டமும் அதிகாரமும் கையில் இருந்தால் கூட திறனற்ற காவல்துறை.. அதற்கு பதிலாக ஒரு சாதாரண மனிதனால் அனைத்தையும் வென்று காட்டிவிட முடியும் என்று இந்த முதல் பக்கம் சொல்ல வருகிறதா.?
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது..
அனீஷ் அஷ்ரப் இயக்கி இருக்கிறார்.. கிரைம் திரில்லர் பாணியில் படத்தைக் கொண்டு சென்றாலும் விறுவிறுப்பு குறைவு..
ஆனால் எச்சரிக்கை பதிவையும் இந்த முதல் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு சொல்லியிருக்கிறார் இயக்குனர்..
கல்லூரியில் ஆண் – பெண் நட்பாக பழகினாலும் ஆனுடன் ஒரு பெண் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பதிவையும் ஒரு சோசியல் மெசேஜாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அனீஸ் அஷ்ரப்..
Chennai Files Muthal Pakkam review
—

