யாதும் அறியான் திரை விமர்சனம்…
யாதும் அறியான் திரை விமர்சனம்…
ஸ்டோரி…
இரண்டு காதல் ஜோடிகள்..
தினேஷ் & பிரானா
ஆனந்த் பாண்டி & ஷியாமல்
தனது காதலி பிராணாவுக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்க ஒரு காட்டு பங்களாவுக்கு தன் நண்பர் மற்றும் அவரது காதலியுடன் என நால்வரும் செல்கின்றனர்.. அந்த பங்களாவில் சமையல்காரராக பணிபுரிகிறார் அப்பு குட்டி..
பிரானாவுக்கு ஷாக் கொடுத்து அவளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார் தினேஷ்.. ஒரு கட்டத்தில் திடீரென பிரானா மயங்கி விழுந்து இறந்து விடுகிறார்..
இதனை அறிந்த நண்பர் ஆனந்த் பாண்டி இவரை போலீசில் பிடித்துக் கொடுக்க முயற்சிக்கிறார்.. ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை என மறுக்கிறார் தினேஷ்.. இதனால் நண்பர்களுக்கு பிரச்சனை நடக்கிறது..
இதன் பிறகு என்ன நடந்தது.? நிஜமாகவே பிரானா இறக்க என்ன காரணம்.? நண்பர்கள் என்ன செய்தனர்.? போலீசில் சிக்கி கொண்டார்களா.? பிழைத்தார்களா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
தினேஷ் & பிரானா
ஆனந்த் பாண்டி & ஷியாமல்… நால்வரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளனர்..
வடிவேலு ஒரு படத்தில் சொல்வார் கனவு கண்டாலும் ஒரு அளவு வேண்டாமா.? என்பது போல கனவில் நண்பர்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வது.. பின்னர் அது கனவு.. பின்னர் அது கனவில்லை என்பது போல மாறி மாறி வரும் காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது..
சமையல்காரர் அப்பு குட்டி.. பயத்தையும் பதட்டத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..
கடைசியாக மனநல மருத்துவராக தம்பி ராமையா நடித்திருக்கிறார்.. இந்தப் பிரச்சினைகளுக்கு கனவுகள் தான் காரணம் என சொல்லி சில உதாரணங்களை சொல்லி நம்மை கடுப்பேத்துகிறார்.. மனநல மருத்துவரின் கேரக்டர் திணிக்கப்பட்டு நம்மையும் திணற அடிக்க செய்கிறது..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் எல்.டி.. கொடுக்கப்பட்ட காட்டுபங்களாவில் தன் திறமையை காட்ட முயற்சித்து இருக்கிறார்..
தர்ம பிரகாஷ் பின்னணி இசை ஓகே ரகம்.. பாடலில் மெனக்கெட்டு இருக்கலாம்..
இயக்குனர் எம் கோபி.. நடிகர் விஜய்யை முதல்வராக காட்ட வேண்டும் என்பதற்காகவே 2026 காட்சிகளை வைத்திருக்கிறார்.. ஆனால் அந்தப் போஸ்டரிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை..
தனக்கு மட்டுமே கதை புரிந்தால் போதும் என நினைத்து விட்டாரோ என்னவோ.? யாதும் அறியான் என்று சொல்லி யாருக்கும் எதையும் புரியாமல் அறியாமல் செய்துவிட்டார் இயக்குனர் கோபி..
Yaadhum Ariyaan movie review

