கண்ணப்பா விமர்சனம்… காளஹஸ்தி கண்ணப்பர் தரிசனம்
கண்ணப்பா விமர்சனம்… காளஹஸ்தி கண்ணப்பர் தரிசனம்
திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என மூன்று யுகங்களில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்லி இருக்கிறார்கள்..
நாத்திகனாக வளர்ந்த ஓருவன் சிவபெருமான் ஸ்பரிசத்தினால் சிவ பக்தனாக மாறி, தன் இரண்டு கண்களை அந்த திரிநேத்திரனுக்கு வழங்கி கண்ணப்பராக மாறிய பக்தனின் புராணக்கதை தான் இந்த திரைப்படம்..
ஸ்டோரி…
தன்னுடைய சிறுவயதில் கடவுளுக்காக தன் நண்பனை நரபலி கொடுத்ததால் கடவுளை மறுக்கிறார் நாயகன் விஷ்ணு மஞ்சு..
முப்பது வருடங்கள் ஆனாலும் கடவுளை ஏற்க மறுத்து இவர் இறுதியாக எப்படி சிவனின் பக்தனாக மாறினார் என்பதுதான் படத்தின் கதை..

கேரக்டர்ஸ்…
விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், மதுபாலா, சம்பத் ராம், ஐஸ்வர்யா…
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கதை நாயகனாக விளாசி இருக்கிறார்.. படம் முழுக்க நாத்திகனாகவே வரும் இவர் கிளைமாக்ஸ் அரை மணி நேரத்தில் ஆன்மீகவாதியாக மாறி பண்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நடிப்பில் துடிப்பில் கலங்க வைக்கவும் செய்திருக்கிறார்..
அழகான நடிப்பில் வசீகரிக்கிறார் பிரீத்தி முகுந்தன்.. அதே சமயம் கவர்ச்சியான உடைகளில் நம்மை சூடேற்றுகிறார்.. இது போன்ற ஆன்மீக படத்தில் கூடுதல் கவர்ச்சியை குறைத்து இருக்கலாம்..
சிவனாக அக்ஷய் குமார் & பார்வதியாக காஜல் அகர்வால்… இருவரும் விண்ணில் இருந்து பேசிக்கொண்டு பூமியை கண்காணிப்பதாக காட்சிகளை நகர்த்திருக்கின்றனர்.. சிவனின் தூதுவர் காலபைரவராக பிரபாஸ் நடித்துள்ளார்.. இவரது தோற்றம் பிரகாசிக்கிறது..

வாயுலிங்கத்திற்கு பூஜை செய்யும் அர்ச்சகராக மோகன் பாபு.. இவரது அறிமுகக் காட்சி அசத்தல்.. இவரது தோற்றமும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது..
சிவனின் மற்றொரு அவதாரமாக மோகன்லால்.. இவரது பேச்சு மலையாளம் கலந்த தமிழ் என்பதால் படத்துடன் கொஞ்சம் ஒட்ட மறுக்கிறது.. தன் அனுபவ நடிப்ப அந்த கேரக்டரை உயரச் செய்திருக்கிறார் மோகன்லால்..
சரத்குமார் & சம்பத்குமார் உள்ளிட்டோர் காட்சிகள் படத்திற்கு பெரிய பலம்.. மதுபாலா & ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பலம்.. கதையுடன் நம்மை ஒன்றை வைத்து நகர செய்கிறது.. ஸ்டீபன் தேவசியின் இசை அருமை..
ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவில் 80% காட்சிகள் நியூசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.. அதன் பசுமை நம் கண்களை விட்டு நகர மறுக்கிறது..
பெரும்பாலும் விஷ்ணு மஞ்சு, சரத்குமார் ப்ரீத்தி, மதுபாலா உள்ளிட்டோர் வசிக்கும் இடத்தையே ஒரே போல கேமரா ஆங்கிளில் காட்டியிருப்பது போர்..
தயாரிப்பு : 24 பிரேம்ஸ் பேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : முகேஷ் குமார் சிங்
சைவ சித்தாந்தத்தில் உள்ள 63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனாரின் கதையை அழகான ஆன்மீக திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் முகேஷ் குமார் சிங்..
அனைத்து மாநில இந்திய மக்களும் ரசிக்கும் வகையில் அழகான திரைக்கதை எழுதி இருக்கிறார் விஷ்ணு மஞ்சு..
சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர் கதையை ரசிக பக்தர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. இத்துடன் ஸ்ரீ காளஹஸ்தி வரலாற்றை சொல்லி இருப்பது சிறப்பு..
படம் தொடங்கி 2 1/2 மணி நேரமாக கண்ணப்பன் கதை எப்ப வருமோ என்று காத்திருக்கையில்.. கடைசி 1/2 மணி நேரத்திலே கண்ணப்பர் கதை வருகிறது.. அதை விடுத்து இடைவேளைக்கு முன்பு 20 நிமிட காட்சிகளை வெட்டி எறிந்து இருந்தாலும் படத்தில் குறை இருந்திருக்காது..
படத்தின் பிரம்மாண்ட மேக்கிங் நம்மை அசர வைத்தாலும் படத்தின் நீளம் நமக்கு கொஞ்சம் சோர்வை தருகிறது..
Kannappa movie review

