படை தலைவன் விமர்சனம்.. படை தலைவனை தாங்கிய இசை தலைவன்

படை தலைவன் விமர்சனம்.. படை தலைவனை தாங்கிய இசை தலைவன்

படை தலைவன் விமர்சனம்.. படை தலைவனை தாங்கிய இசை தலைவன்

 

ஸ்டோரி…

பானைத் தொழில் செய்து வரும் கஸ்தூரிராஜா.. இவரது மகன் சண்முக பாண்டியன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்..

இவர்களுக்கு 3வதாக ஒரு யானையும் குழந்தை போல வளர்த்து வருகிறார்..

ஒரு கட்டத்தில் இவர்களது குடும்பம் கடனில் சிக்கி தவிக்க வேறு வழியின்றி யானையை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர்..

 

ஆனால் அப்போது மதம் பிடித்த யானையால் பிரச்சனை உருவாகிறது.. இதனால் யானையை பயிற்சி முகாமுக்கு எடுத்து செல்கிறது அரசு.. ஆனால் அங்கு யானை தொலைந்து விடுகிறது.

காணாமல் போகும் அளவிற்கு யானை சின்ன உருவமா என்று கேள்வி எழுகிறது.. அதுவும் சரிதான்.. அதனைத் தொடர்ந்து படத்தில் என்ன நடந்தது என்பது மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நடிகர்கள் : சண்முக பாண்டியன், யாமினி சந்தர், கஸ்தூரிராஜா, முனீஸ் காந்த், கருடன் ராம், ரிஷி, யூகி சேது, அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, லோகு..

இந்தப் படைத்தலைவனை தாங்கி நிற்கும் ஆர்டிஸ்ட் ஆக உயர்ந்து நிற்கிறார் சண்முக பாண்டியன்.. கமர்சியல் ஹீரோவுக்கு வேண்டிய எந்த மாஸ் காட்சிகளும் வைக்காமல் எதார்த்த நாயகனாக நம் மனதில் பதிகிறார்..

முக்கியமாக சண்முக பாண்டியன் கண்கள் விஜயகாந்த்தை நினைவுப்படுத்துகிறது.. படத்தில் ரொமான்ஸ் இல்லை என்பதால் ஆக்ஷனில் பட்டையை கிளப்பி இருக்கிறார்..

கஸ்தூரிராஜா கனமான பாத்திரம் ஏற்று நடிப்பில் கண்கலங்க வைக்கிறார்..

மகனுக்கு உதவும் ஒரு கேரடக்டரில் ஏஐ தொழில் நுட்பத்துடன் வருகிறார் மறைந்த விஜயகாந்த்.. ஆனால் பேப்பர் மாஸ்க் போலவே தெரிகிறது.. விஜயகாந்தின் பெயரை இப்படி வீணடிக்க வேண்டுமா மகனே..??

யாமினி, கருடன் ராம், அருள்தாஸ் முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் பெறுகின்றனர்.. ஆனால் அருள்தாசுக்கு டப்பிங் குரல் செட்டாகவில்லை..

டெக்னீசியன்ஸ்…

விஜே கம்பைன்ஸ், தாஸ் பிக்சர்ஸ், கேப்டன் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் : யு.அன்பு

லப்பர் பந்து படத்தில் வந்த பொட்டு வச்ச தங்க குடம் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடல் ஆகும்.. எனவே விஜயகாந்த் மகனுக்கு அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜ.. லப்பர் பந்துவில் நமக்கு கொடுத்த எனர்ஜி இந்த படத்தில் இல்லை.. சண்டை காட்சியில் பாடலை பயன்படுத்தி வீணடித்து விட்டனர்..

படத்தின் ஆணிவேராக இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டி இருக்கிறது.. படைத்தலைவனை தாங்கி நிற்கிறார் இசைத்தலைவன் இளையராஜா..

சதீஷ்குமார் ஒளிப்பதிவு காடு பகுதிகளை ரசிக்க வைக்கிறது.. அன்பு என்பவர் இயக்கி இருக்கிறார்.. கேப்டன் ரசிகர்களை குறிவைத்து பல காட்சிகளில் விஜயகாந்த் படங்களை பயன்படுத்தி இருக்கிறார்.. ஆனால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

ஏகப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை முக்கியமாக பீகாரில் கதை சம்பவம் நடப்பதாக சில காட்சிகள் உள்ளது.. ஆனால் ஒரு துளி கூட பீகார் வாசனை இல்லை.. அதுபோல இந்திய அளவில் ரவுடிகளால் தேடப்படுகிறார் சண்முக பாண்டியன்.. ஆனால் அது பற்றிய காட்சிகளும் இல்லை..

வாழ வழியின்றி கடன் வாங்கி அவமானப்பட்டு கஷ்டப்பட்டு வாழ்கிறார் கஸ்தூரிராஜா.. ஆனால் அவர் யானையை வளர்ப்பது நோக்கம் என்ன என்பதற்கான காட்சிகள் செண்டிமெண்ட் ஆக இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகவில்லை..

படம் முழுவதும் சீரியஸாகவே செல்கிறது.. ஆல்ரெடி படத்தில் ரொமான்ஸ் இல்லை.. காமெடியாவது கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கலாம் இயக்குனர் அன்பு..

Padai Thalaivan movie review