FIRST ON NET ஆண்கள் மட்டுமே நடித்த ‘ஆகக் கடவன’ விமர்சனம் 4/5

FIRST ON NET ஆண்கள் மட்டுமே நடித்த ‘ஆகக் கடவன’ விமர்சனம் 4/5

 

FIRST ON NET ஆண்கள் மட்டுமே நடித்த ‘ஆகக் கடவன’ விமர்சனம் 4/5

 

ஆகக் கடவன அப்படி என்றால் என்ன? அப்படியே ஆகட்டும்.. ஆக கடந்தவை.. நல்லதாக அமையட்டும் என்ற பொருள்படும்.

ஸ்டோரி…

வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்த மூன்று நபர்கள் சந்தித்து நண்பர்களாகி ஒரு மெடிக்கல் ஷாப் வைக்க முயற்சிக்கின்றனர்.. அதற்காக அவர்கள் பணம் திரட்டி வைத்திருக்கும் போது அதை யாரோ ஒரு மர்ம நபர் களவாடி செல்கிறார்..

எனவே வேறு வழியின்றி ஊருக்கு சென்று பணம் திரட்ட செல்கின்றனர்.. அப்போது போகும் வழியில் அவர்களது பைக் டயர் பஞ்சர் ஆகி விடுகிறது.. அதற்கு சில தூரத்தில் ஒரு பஞ்சர் கடை போன் நம்பர் இருக்கவே அவர்களை அழைக்க ஒரு காட்டுப் பகுதியில் ஒரு குட்டி லாரியில் பைக்கை ஏற்றி வரச் சொல்கிறார்..

அங்கு சென்ற பின்னரும் உடனே பஞ்சர் ஒட்டாமல் மற்ற வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருக்க இவர்களுக்கு ஏதோ சந்தேகம் வருகிறது.. இந்த சூழ்நிலையில் இவர்கள் பைக்கில் வைத்திருந்த 3 லிட்டர் பெட்ரோலும் திருடப்படுகிறது.. மேலும் இவர்களின் செல்போனை சார்ஜ் போடும்போது அந்த பேட்டரியும் திருடப்படுகிறது.

இவை எல்லாம் நடப்பது ஏன்.? இந்த மூன்று நபர்களை அங்கு உள்ளவர்கள் குறி வைப்பது ஏன்.? அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்.? பின்னணியில் நடந்தது என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.!

கேரக்டர்ஸ்… & டெக்னீசியன்ஸ்…

முற்றிலும் புதுமுகங்கள் மட்டுமே நடித்திருக்கும் இதில் பெண்களே இல்லை.. எல்லாம் ஆண்கள் மட்டுமே என்பது இந்த படத்திற்கு உள்ள சிறப்பு அம்சம்..

கவர்ச்சி காட்டும் பெண் சதையை நம்பாமல் கதையை நம்பி வந்திருக்கும் இந்த ஆக கடவன படக்குழுவினரை தமிழ் சினிமா பாராட்டி வரவேற்க வேண்டும்..

நார்மலான கதைக் களமாக இருந்தாலும் அதை சொல்லும் விதத்தில் இயக்குனர் தர்மா சபாஷ் போட வைக்கிறார்.. படத்தில் ஹீரோ வில்லன் என ஓரிருவர் அடையாளப்படுத்தப்பட்டாலும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை கொடுத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..

முக்கியமாக இசையமைப்பாளர் சாந்தன் பணியை பாராட்ட வேண்டும்.. ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கும் அளவிற்கு பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. அடுத்தது என்ன நடக்கும்.? என்ற உணர்வை நமக்கு இசையாக கொடுத்து திரையை விட்டு கண்களை அகலாமல் வைத்து விட்டார்..

ஹீரோயின் இல்லாமல் எப்படிப்பா படம் எடுக்க முடியும்.? என்ற ஒரு வார்த்தை கூட கேட்காமல் கதையை நம்பி ஆண்களை நம்பி இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லியோ & அனிதாவை பாராட்ட வேண்டும்..

 

தயாரிப்பாளர் : அனிதா லியோ – லியோ V ராஜா

 

படத்தில் பணி புரிந்தவர்கள் எல்லாம் புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு அறிமுகம் கொடுக்கும் போது ஒவ்வொரு பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் யார்? இவர்களுக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பதை வாய்ஸ் ஓவரில் கொடுத்து இருப்பது சிறப்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்.. :

இயக்குனர் : தர்மா
ஒளிப்பதிவாளர் : லியோ V ராஜா
இசையமைப்பாளர் :
சாந்தன் அன்பழகன்
படத்தொகுப்பாளர் : சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ்
பாடலாசிரியர் : விக்கி
சண்டைபயிற்சி : தேசாய்
கலை இயக்குனர் : விஜயவீரன்
ஒளிக்கலவை : வினோத்குமார். A
ஒலி வடிவமைப்பு :
A. சதிஷ்குமார்
ஒலிக்கலவை :
ராஜா நல்லைய்யா

தயாரிப்பு நிறுவனம்: *சாரா கலைக்கூடம்*

 

Aaga Kadavana movie review