கேங்கர்ஸ் விமர்சனம் 4/5.. காமெடிக்கு வடிவேலு கேங்ஸ்டர்

கேங்கர்ஸ் விமர்சனம் 4/5.. காமெடிக்கு வடிவேலு கேங்ஸ்டர்

கேங்கர்ஸ் விமர்சனம் 3.75/5.. காமெடிக்கு வடிவேலு கேங்ஸ்டர்

 

ஸ்டோரி…

மைம் கோபி நடத்தும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவி திடீரென மாயமாகிறார். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கேத்ரின் தெரசா அவள் காணாமல் போனதில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்கிறார்.

அந்த சமயத்தில் காவல்துறையில் இருக்கும் சுந்தர் சி இது பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.. ஆனால் ரகசிய போலீஸ் போல செயல்பட்டு அதே பள்ளியில் பிடி மாஸ்டராக பணிக்கு சேர்கிறார்..

அப்பொழுதுதான் பல ரகசியங்கள் அவருக்கு தெரிய வருகிறது.. அந்த பள்ளியை நடத்தும் மைம் கோபி & அருள்தாஸ் ஆகியோருக்கு தண்ணீர் வியாபாரம் மட்டுமல்லாமல் சாராய வியாபாரமும் இருப்பதும் பல பள்ளி மாணவர்களை போதனைக்கு அடிமையாக்குவதும் போன்ற விவரங்களை அறிகிறார்..

மேலும் ₹ 100 கோடி ரூபாயை அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் லாக்கர் பற்றிய ரகசியத்தையும் அறிகிறார்.. இதனை எடுத்து தன்னுடைய கேங்ஸ்டர் என்ற (கேங்கர்ஸ்) கூட்டணியில் கேத்தரின், வடிவேலு, முனீஸ்காந்த் மற்றும் பக்ஸ் ஆகியோரை வைத்துக் கொண்டு அவர் போடும் திட்டங்கள் என்ன என்பதுதான் லாஜிக் இல்லாத காமெடி மேஜிக் கதை..

கேரக்டர்ஸ்…

படத்தின் முதல் பாதியை ஆக்சனுக்கும் இரண்டாம் பாதியை சென்டிமென்ட்க்கும் காமெடிக்கும் பிரித்துக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் சுந்தர் சி.. ஆக்ஷனில் சுந்தர் ஸ்கோர் செய்துவிட்டு காமெடியை வடிவேலுக்கு கொடுத்திருக்கிறார். இருவரும் சதம் அடித்துள்ளனர்..

சிங்காரம் கேரக்டரில் சிரிப்பு மழையில் சிதற விட்டிருக்கிறார் வடிவேலு.. பாடி லாங்குவேஜில் பழைய வடிவேலு இல்லை என்றாலும் டைமிங் காமெடியில் கலக்கி இருக்கிறார்..

பக்ஸ் போடும் லேடி கெட்டப்பும் அவரது முகபாவனைகளும் வேற லெவல் ரகம்..

பொறுப்பான ஆசிரியை வேடத்தில் கேத்தரின் தெரசா.. அழகிலும் கவர்ச்சியிலும் ரசிகர்களை சூடாக்குவார்..

ஹரிஷ் பெராடிக்கு பெரிய வேலை இல்லை.. இவர் பல்லை கடித்துக் கொண்டு பேசும் வசனங்கள் புரியவில்லை.. கொஞ்சம் வாயை திறந்து பேசினால் கூட உதட்ட அசைவை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம் போல..

அழகும் திறமையும் நிறைந்த வாணி கேரக்டர் வீணடிக்கப்பட்டிருக்கிறது.. ஓரிரு நிமிடங்கள் வந்தாலும் நடிப்பில் வா நீ வாணி என சொல்ல வைக்கிறார்..

மைம் கோபி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் வில்லன் நடிப்பில் மிரட்டல்…

டெக்னீசியன்ஸ்…

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என்று மூன்ற அவதாரங்களை இந்த கேங்கர்ஸ் படத்திற்காக எடுத்திருக்கிறார் சுந்தர் சி..

சுந்தர் சி படங்கள் என்றாலே அனைத்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களும் இருக்கும்.. அதில் லாஜிக் பார்க்கக் கூடாது.. ஆனால் நிச்சயம் ரசித்து மகிழ்ந்து வரலாம் என்பதை 30 வருடங்களாக கொடுத்து வருகிறார் சுந்தர்..

இவரது படங்களில் நடித்த எந்த காமெடி நடிகரும் சோடை போனதில்லை.. கவுண்டமணி சந்தானம் விவேக் வடிவேலு என அனைவருக்கும் சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடி ட்ரீட்டு தான்..

முதல் பாதியை விட இரண்டாம் பாதி காமெடியிலும் திரைக்கதையிலும் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.. அதுவும் வடிவேலு போடும் ஓல்டு லேடி கெட்டப்பில் காமெடி மழை தான்..

சத்யா இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை என்றாலும் கேத்ரின் போடும் குத்தாட்டம் ரசிக்க வைக்கிறது.. சண்டை காட்சியில் மாஸான் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர்..

₹ 100 கோடியை அடிக்கும் லாக்கர் ரகசியத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அட போங்கய்யா என்னையா லாஜிக்கு.. காமெடிக்கு நான் கேரண்டி என்று ரசிக்க வைத்து விட்டார் இயக்குனர் சுந்தர் சி..

Gangers movie review