காரைக்கால் TO கதாநாயகன்..; சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் KPY பாலா
காரைக்கால் TO கதாநாயகன்..; சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் KPY பாலா
காரைக்கால் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலா.. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.. எனவே இவரை கே பி ஒய் பாலா என்ற ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்..
தற்போது சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.. மேலும் சேவை உள்ளம் கொண்ட இவர் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.. பல மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட வழங்கி வருகிறார்..
மேலும் சினிமா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கிய வருகிறார்.. இவரது காமெடிக்கு என ரசிகர் கூட்டமும் உண்டு..
இதனிடையில் இவரது சேவைகளை பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் விரைவில் தான் தயாரிக்கும் ஒரு படத்தில் பாலாவை நாயகனாக நடிக்க வைப்பேன் என தெரிவித்து இருந்தார்.
ஆனால் லாரன்ஸ் செய்வதற்குள் வேறு ஒரு படத்தில் பாலா நாயகனாக நடிக்கும் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பாலா நாயகனாக நடிக்கும் படத்தினை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரிக்கவுள்ளார்.
‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக விவேக் மெர்வின் பணிபுரிய இருக்கிறார்கள்..
இதில் பாலாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது..
Kpy Bala debut as hero in Sherif direction

