Thug Life : கமல் ரஜினிக்கு போட்டியாக டி.ஆர்.; ஹீரோயின்ஸ் லவ் யூ சொல்லல.. கல்யாண கேள்விக்கு த்ரிஷா – கமல் அதிரடி பதில்
Thug Life : கமல் ரஜினிக்கு போட்டியாக டி.ஆர்.; ஹீரோயின்ஸ் லவ் யூ சொல்லல.. கல்யாண கேள்விக்கு த்ரிஷா – கமல் அதிரடி பதில்
தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாத படமான ‘நாயகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் (34 வருடங்களுக்குப் பிறகு) தற்போது நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளனர்.
கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள இந்த படத்திற்கு தக் லைப் Thug Life என்று பெயரிட்டுள்ளனர்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக இணைந்து தயாரித்திருக்கிறார்.
இதில் கமல்ஹாசன் உடன் முதன்முறையாக இணைந்து இருக்கிறார் நடிகர் சிலம்பரசன்.. இவர்களுடன் நடிகை திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்..
இந்தப் படம் ஜூன் 5 தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘ஜிங்குச்சா…’ என்ற பாடல் மட்டும் வெளியிடப்பட்டது.. இந்தப் பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு..
இதற்கான விழாவை பிரம்மாண்டமாக படக்குழுவினர் நடத்தி இருந்தனர்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது…
நானும் ரஜினியும் நடித்துக் கொண்டிருக்கும் போது டி ஆர் சினிமா துறைக்கு வந்தார்.. எங்கள் போஸ்டர் இருந்த இடங்களில் அவரின் போஸ்டர் இடம் பெற்றது.. அப்போது நானும் ரஜினி பேசிக் கொண்டிருப்போம்..
என் மீது எப்போதும் பாசம் கொண்டவர் எஸ் டி ஆர் அப்பா டி ஆர்.. ஏதாவது எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னை தேடி வந்து என்னை கட்டிப்பிடித்து அழுது என் சட்டையை நனைத்து விடுவார்.. தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் போல.. அதை பாசத்தை அவரது மகன் எஸ் டி ஆர் (சிம்பு) என் மீது கொண்டிருக்கிறார்..
தனக்கு 11 வயது இருக்கும் போது அபிராமி நடிக்க தொடங்கியதாக சொன்னார்.. என் அருகில் திரிஷா இருக்கும்போது அபிராமி இப்படி வயதை குறிப்பிட்டு சொல்லலாமா? சரி அதெல்லாம் கடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது” என்ற கலகலப்பாக பேசினார் கமல்.
மேலும் தொடர்ந்து பேசும்போது…
என் படத்தில் அபிராமி த்ரிஷா அபிராமி என இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் அவர்கள் ஒரு முறை கூட எனக்கு ஐ லவ் சொன்னதில்லை ஆனால் எனக்கு எப்போதும் ஐ லவ் யூ சொல்பவர் நடிகர் ஜோதி ஜார் அவர் குட் மார்னிங் கூட சொல்ல மாட்டார் ஐ லவ் யூ சார் என்று தான் சொல்லுவார்.
நாயகன் படத்திற்குப் பிறகு நானும் மணிரத்தினமும் எப்போதும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் பல காரணங்களால் தள்ளி தள்ளி கொண்டு போனது.. ஆனால் இன்றும் நீங்கள் அந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள் இது உங்களால் தான் சாத்தியமானது..
அவரை நான் ஐந்தரை மணி மணிரத்னம் என்பேன்.. காரணம் அவர் அதிகாலை 5 1/2 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார்.. அவரிடம் கே பாலச்சந்தரை பார்த்தேன்.. இந்த வார்த்தை நான் சொல்வதனால் அவர் கோபித்துக் கொள்ள மாட்டார்..
ஜூன் 5ஆம் தேதி தக் லைப் படம் ரிலீஸ் ஆகிறது.. இதில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும்.. ஆனால் அது வேறு மாதிரியாக இருக்கும்.. இது அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்.. நாங்கள் வியாபார ரீதியாக சொல்லவில்லை ஒரு சினிமாக்காரராக இருந்து இதை சொல்கிறோம்..” என்று பேசினார் நடிகர் கமல்ஹாசன்..

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சியும் நடைபெற்றது.. அதில் நடிகர்கள் கமல்ஹாசன் சிலம்பரசன் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
அப்போது தொகுப்பாளினி திருமணம் குறித்து த்ரிஷாவிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்..
எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை.. அது நடந்தாலும் ஓகே நடக்காவிட்டாலும் ஓகே என்று பதில் அளித்தார் திரிஷா.
அப்போது அருகே இருந்த கமலிடம் இதே கேள்வி குறித்து கேட்க பட்ட போது.. 15 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியை குறிப்பிட்டு பதில் அளித்தார் நடிகர் கமல்ஹாசன்
என்னிடம் எம்.பி., பிரிட்டாஸ், ‘நீங்க பிராமணர். ராமரை வணங்கும் நீங்க எப்படி ரெண்டு கல்யாணம் பண்ணலாம்?’ எனக் கேட்டார்.
நான் கடவுளை வணங்குவதில்லை.. மேலும்
பிராமணர் குடும்பத்திலிருந்து வருவதற்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்னு எனக்குத் தெரியல.
`நான் ராமர் இல்ல.. ராமர் அப்பா வகையறா. இன்னும் 49 ஆயிரத்துச் சொச்சம் கல்யாணம் பாக்கி இருக்கு” எனப் பேசினார் கமல்ஹாசன்..
Kamal and Trisha Thug life reply about marriage

