RETRO சிக்ஸ்பேக் வச்ச பர்ஸ்ட் ஹீரோ சூர்யா – சிவகுமார்..; சைலன்டான சக்திவேலன்.?; என் வாழ்க்கையின் நோக்கமே ‘அகரம்’.. – சூர்யா
RETRO சிக்ஸ்பேக் வச்ச பர்ஸ்ட் ஹீரோ சூர்யா – சிவகுமார்..; சைலன்டான சக்திவேலன்.?; என் வாழ்க்கையின் நோக்கமே ‘அகரம்’.. – சூர்யா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரெட்ரோ.’
2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய ஹஃபீக் முகமது அலி எடிட்டிங் செய்துள்ளார்..
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஏப். 19) சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

லவ் டீடாக்ஸ் என்ற பாடலுக்கு பர்ஃபார்ம் செய்தார் ட்ரெண்டிங் டான்சர் ரம்யா ரங்கநாதன்.
பின்னர் சந்தோஷ் நாராயணன் அந்த பாடலை நடிகர் சூர்யாதான் பாடியதாகத் தெரிவித்தார்..

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக சக்திவேலன் பெற்றுள்ளார்.. பொதுவாகவே நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படத்தைப் பற்றி குறைந்தபட்சம் 15 நிமிடங்களாக பேசும் சக்திவேலன் இந்த படத்தை பற்றி ஒரு நிமிடம் கூட பேசவில்லை.. ஆனால் ரெட்ரோ சக்சஸ் விழாவில் நிறைய பேசுவேன்” என்று மட்டும் தெரிவித்தார்..
நடிகர் சிவகுமார் பேசும்போது… தமிழ் சினிமாவில் முதன்முதலாக உடலை வருத்தி சிக்ஸ் பேக் வைத்து நடித்தவர் சூர்யா தான் என்றார்.. சூர்யாவுக்கு முன்பும் பின்பும் எந்த நடிகரும் சிக்ஸ் பேக் வைத்ததில்லை என்றும் பேசினார்..
இதில் நாயகன் சூர்யா பேசியதாவது…
“ரெட்ரோ என்ற சொல் நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும். நான் கடந்து வந்த இந்த 30 ஆண்டுகளை என்னால் மறக்கவே முடியாது.. சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்தேன். அவர்களில் பலருக்கும் 20 வயதுதான் இருக்கும். என் மீது மிகுந்த அன்பு வைத்து அக்கறையுடன் நலம் விசாரித்தனர். இந்த அன்பு தான் என்னை இப்போது வரை இயங்க வைக்கிறது.. இந்த அன்பு இருந்தால் நான் எப்போதும் நன்றாக இருப்பேன்..
கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது பெரும் மரியாதை உண்டு. இப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்போது ஒவ்வொரு நாளையும் நான் ரசித்து அனுபவித்தேன்..

பத்தாம் வகுப்பு படிக்கும் போதும் 12ஆம் வகுப்பு படிக்கும் போதும் எல்லா தேர்வுகளில் தோல்வி அடைந்தேன். ஆனால் பொதுத் தேர்வில் பாஸ் ஆகிவிட்டேன். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கை மிகவும் அழகானது.
சரியான வாய்ப்பு வரும்போது அதை விட்டுவிடாதீர்கள். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு எனக்கு நானே தேடிக் கொண்ட பதில் கிடைத்த பதில் தான் அகரம் ஃபவுண்டேஷன்.
நீங்கள் எனக்கு கொடுத்த சக்தியினால் அதனை அனைவரிடமும் என்னால் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. அதன் மூலம் சுமார் 8 ஆயிரம் தம்பி தங்கைகள் பட்டதாரிகள் ஆக முடிந்தது..” என்று மகிழ்ச்சியாக பேசினார் நடிகர் சூர்யா..
‘கனிமா..’ பாடலுக்கு நாயகி பூஜா ஹெக்டே ஆட்டம் போட்டு அசத்தியது ரசிகர்களை பரவசப்படுத்தியது..
Agaram is my lifes Answer Suriya speech at Retro Event

