மதிமாறன் இயக்கத்தில் சூரி – சத்யராஜ் – மஹிமா நடிக்கும் ‘மண் டாடி’
மதிமாறன் இயக்கத்தில் சூரி – சத்யராஜ் – மஹிமா நடிக்கும் ‘மண் டாடி’
சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய நடிகர் சூரி தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்..
விடுதலை 1, விடுதலை 2, கருடன் ஆகிய படங்களில் இவரது ஹீரோயிசம் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.. ஆனால் ‘கொட்டுக்காளி’ படம் மட்டும் படு மோசமான விமர்சனங்களை சந்தித்தது..

தற்போது ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளது..
இந்த நிலையில் சூரி-யின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அத்துடன் “காயத்தை ஏற்படுத்திய ஆயுதத்தால் மட்டுமே காயத்தை ஆற்ற முடியும்” என்ற வசனமும் அறிவிப்பு போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்திற்கு மண் டாடி என்று பெயரிட்டுள்ளனர்.
ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவன சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்..
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவரும் ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்ஃபி படத்தின் இயக்குநருமான மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
மண்டாடி என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என கூறப்படுகிறது..
‘மண் டாடி’ படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க நாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார்..
இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி இன்று ஏப்ரல் 19ஆம் தேதி மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sooris next movie titled Mandaadi

