FIRST ON NET நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் NEEK விமர்சனம் 4/5… பிரேக் அப் காதலில் வெரைட்டி பார்ட்டி

FIRST ON NET நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் NEEK விமர்சனம் 4/5… பிரேக் அப் காதலில் வெரைட்டி பார்ட்டி

FIRST ON NET நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் NEEK விமர்சனம் 4/5… பிரேக் அப் காதலில் வெரைட்டி பார்ட்டி

 

ஸ்டோரி…

நாயகன் பவிஷ் – நாயகி அனிகா இருவரும் காதலிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் லவ் பிரேக்கப் ஆகி இருவரும் பிரிகின்றனர்.

காதலியை நினைத்து வருந்தும் மகன் அபிஷேக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர் நரேன் & சரண்யா தம்பதியினர்.. அதன்படி பிரியா வாரியரை பெண் பார்க்க செல்கின்றனர்.. அப்போதுதான் பவிஷ் & பிரியா இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் காலகட்டங்களில் பவிசை தன் திருமணத்திற்கு அழைக்கிறார் முன்னாள் காதலி அனிகா.

இதனை அறிந்து கொள்ளும் பிரியா வாரியர்.. ‘நீ திருமணத்திற்கு சென்று வா.. ஒருவேளை உன் முன்னாள் காதலி உன்னை ஏற்றுக்கொண்டால் அவளை திருமணம் செய்து கொள்.. அல்லது மீண்டும் வா நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்து அனுப்புகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? அனிகாவை சந்தித்தாரா பவிஷ்? முறிந்து போன காதல் மீண்டும் இணைந்ததா? யாரை திருமணம் செய்தார் பவிஷ்.. இடையில் என்ன நடந்தது? என்பதை லவ்வீக எனர்ஜியுடன் சொல்லி இருக்கிறார் டைரக்டர் தனுஷ்..

கேரக்டர்ஸ்…

தனுஷின் சகோதரி மகன் பவிஷ் தான் ஹீரோ.. இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த பின்னர் தான் ஹீரோவாகி இருக்கிறார்..

இதை நாம் சொல்லாவிட்டாலும் நீங்களே தனுஷை பல காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.. தனுஷின் ஜெராக்ஸ் போல நடித்திருக்கிறார் பவிஷ்.. தனுஷின் பாடி லாங்குவேஜ் வாய்ஸ் என அனைத்தும் பவிஷூக்கு பக்கா பொருத்தம்.. அழுகை சிரிப்பு கலாட்டா நட்பு காதல் ரொமான்ஸ் ஆட்டம் என அனைத்திலும் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நாம் ரசித்த அனிகா இதில் நாயகியாக அசத்தியிருக்கிறார்.. நிலா கேரக்டர் பெயருக்கு ஏற்ப நடிப்பில் நின்று ஜொலிக்கிறார்..

பவிஷின் நண்பனாக வரும் மாத்யூ தாமஸ் வெளுத்துக்கட்டி இருக்கிறார்.. இவர் பிரேமலு படத்திலும் நண்பராக நம்மை கவர்ந்தவர்.. இவரின் ஒன் சைடு லவ் படத்தின் கலகலப்புக்கு செமையா ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது..

மற்றொரு நாயகியாக பிரியா பிரகாஷ் வாரியர்.. காதலை நட்புடன் பார்க்கும் இவரது புரிதல் 2K கிட்சின் மெச்சூரிட்டியை காட்டுகிறது..

இவர்களுடன் (வெங்கடேஷ் மேனன் – ரபியா – ரம்யா ரங்கநாதன்) கேரக்டர்களாகவே மாறிப்போன ஸ்ரேயா அஞ்சலி அரவிந்தன் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் வேற லெவல் ரகம்.. சின்ன சின்ன விஷயங்களை கூட அழகாக சொல்லி நம்மை பிரேம் பை பிரேமாக ரசிக்க வைத்து விட்டார் தனுஷ்..

டெக்னீசியன்ஸ்…

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.. தனுஷ் நடித்த படங்களுக்கு மட்டுமல்ல அவர் இயக்கும் படங்களுக்கும் என்னால் ஹிட் கொடுக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்..

ஒரு பாடலுக்கு வந்து பிரியா மோகன் ஆட்டம் போடும் கோல்டன் ஸ்பேரோ பாடல் இளைஞர்களுக்கு கொண்டாட்டம்.. யெடி பாடலும் அதன் ஆர்ட் ஒர்க்கும் நம் மனதை விட்டு நீங்க மறுக்கும்.. தியேட்டரில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.. லியோன் பிரிட்ட ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா எடிட்டிங் செய்திருக்கிறார்.

படம் முழுக்க பிரம்மாண்டங்களை காண முடிகிறது.. முக்கியமாக பார்ட்டி ஹோட்டல்கள்.. நைட் பீச்.. சரத்குமார் வீடு.. அனிகாதிருமண கொண்டாட்டம், ஹோட்டல் ரூம் உள்ளிட்டவை கண்கொள்ளா காட்சி..

படம் முடிந்து விட்டது என்று நாம் நினைக்கையில் அதன் பிறகு ஏர்போர்ட் காட்சிகள் கொஞ்சம் நம்ப முடியாதவை.. ஓவர் கற்பனைன்னு சொல்லலாம்.. NEEK 2 பாகத்திற்காக லீட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

2K கிட்ஸ் நாடிப் பிடித்து அதற்கு ஏற்ப லவ் பிளாட்பார்ம் அமைத்து இளைஞர்களின் பல்ஸ் பார்த்திருக்கிறார் டைரக்டர் தனுஷ்..

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று படத்தின் தலைப்பில் போடும்போதே இது வழக்கமான காதல் கதை தான் என்பதையும் அழுத்த திருத்தமாக சொல்லி ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்.. பிரேக் அப் காதல் பின்னர் மீண்டும் துளிர்க்கும் காதல் என கொஞ்சம் வெரைட்டி காட்டி இருக்கிறார் டைரக்டர் தனுஷ்.

பா பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை தொடர்ந்து NEEK மூலம் 3வது முறையாக இளைஞர்களை கூறி வைத்து ஹாட்ரிக் ஹிட் அடித்து இருக்கிறார் டைரக்டர் தனுஷ்.

Nilavukku Enmel Ennadi Kobam NEEK review