FIRE விமர்சனம் 3.25/5… இளசுகளுக்கு மூடு… சமூகத்திற்கு சூடு
FIRE விமர்சனம்… இளசுகளுக்கு மூடு… சமூகத்திற்கு சூடு
ஸ்டோரி…
பாலாஜி முருகதாஸ் ஒரு பிசியோதெரபிஸ்ட் டாக்டர்.. இவரது பெயர் காசி.. தன்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் உடலுறவு வைத்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவது இவரது வழக்கம்.. இவரது காதல் வலையில் விழுந்த பெண்கள் பலர்.
திருமணமாகாத சாந்தினி இவரது கிளினிக்கில் வேலை பார்க்கிறார் அவரையும் படம் பிடித்து மிரட்டுகிற வேறு வழி என்று இவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
கணவனால் கைவிடப்பட்ட ரக்ஷிதா இவரது காதல் வலையில் விழுகிறார்..
வெளிநாட்டில் கணவன் இருப்பதால் சாக்ஷியும் ஒரு கட்டத்தில் பாலாஜியின் காம வலையில் சிக்கிக் கொள்கிறார்
இந்தப் பெண்கள் பாலாஜியின் மிரட்டலுக்கு பயந்து தவிக்கும் நிலையில் திடீரென பாலாஜி காணாமல் போகிறார்.. அவரை கொன்று விட்டதாகவும் தகவல்கள் வருகின்றது.. இதற்கான விசாரணை இறங்குகிறார் போலீஸ் ஜே எஸ் கே..
அடுத்தது என்ன நடந்தது?பாலாஜி காணாமல் போனது எப்படி? அவரை கடத்தியது யார்? அவர் நிஜமாகவே கொல்லப்பட்டாரா? என்ற பல திருப்பங்களுடன் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தயாரிப்பாளர் ஜே எஸ் கே (சதீஷ்குமார்.)

கேரக்டர்ஸ்…
Balaji Murugadoss – Kasi
Chandini Tamilarasan – Durga
Sakshi agarwal – Priya
Rachitha Mahalakshmi – Meenatchi
Gayathri shan – Anitha
JSK – Saravanan
Singampuli – thirumoorthi
Suresh chakravarthi – Karna
எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் பிளேபாய் கேரக்டரை பக்காவாக செய்திருக்கிறார் பாலாஜி.. காதல் காம காட்சிகளில் சிக்ஸ் பேக் உடலைக் காட்டி சிலிர்க்க வைக்கிறார்.
டிவி சீரியலில் ரசித்துப் பார்த்த ரக்ஷிதா இதில் கவர்ச்சி மழையில் நனைய விட்டுள்ளார்.. ஹோம்லி மட்டுமல்ல கிளாமருக்கும் நான் ரெடி என்பதை நிரூபித்திருக்கிறார்..
சாந்தினி மற்றும் சாக்ஷி ஆகியோரம் நாங்களும் இருக்கோம்ல என கவர்ச்சி அட்டெண்டன்ஸ் போட்டு இருக்கின்றனர்.. அதே சமயம் எல்லை மீறாத காட்டி இருக்கின்றனர்..
மற்றொரு போலீஸ் அதிகாரியாக சுரேஷ் சக்கரவர்த்தி சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்து அதை தவிர்த்து இருக்கலாம்..
அரசியல்வாதியாக சிங்கம் புலி அடிக்கடி போலீஸ்க்கு போன் செய்து அவரை மிரட்டுவது ஏன் இவருக்கு என்று கேள்வி எழும்புகிறது ஆனால் அதற்கான விடைகளை கிளைமாக்ஸ் சொல்லி இருக்கிறார் JSK..

டெக்னீசியன்ஸ்…
Director & Producer – JSK
Dialogue – SK jeeva
DOP – Sathish.G
Editor – CS premkumar
Music Director – DK
Lyricist – Madura kavi (dum dum kalyanam)
Lyricist – Raa (Medhu medhuvai)
PRO – Nikil Murukan
DK இசையில் பின்னணி இசை கதையுடன் ஒன்றிருப்பதால் ரசிக்க வைக்கிறது.. மெதுவா மெதுவா என்ற பாடல் மிட்நைட் மசாலாவில் நிச்சயமாக இடம்பெறும்.
சதீஷ் ஒளிப்பதிவில் கவர்ச்சி காட்சிகள் கலர்ஃபுல்.. அதிலும் படுக்கையறை காட்சிகள் தன் கேமராவை சுழல விட்டு நம் இதயங்களை சூடாக்கி ஏசி தியேட்டரில் இடம் சேர்க்கிறார்..
எடிட்டர் பிரேம் குமார்.. இப்படத்தை எத்தனை முறை பார்த்து எடிட்டிங் செய்தாரோ.? கிளாமர் குயின்கள் மூலம் கிளுகிளுப்பு ஏற்றி இருக்கிறார்..
நாம் தினமும் செய்திகளில் பார்க்கும் பாலியல் சம்பவங்களை தொகுத்து சமூகப் பொறுப்புடன் கொடுத்திருக்கிறார் ஜே எஸ் கே..
பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை பரபரப்பாகிய டாக்டர் பிரகாஷ் & நாகர்கோயில் காசி உள்ளிட்ட பல சம்பவங்களை காண முடிகிறது.. ஆந்திரா * கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல்வாதிகளின் சுயரூபத்தையும் காட்டியிருக்கிறார்..
சோசியல் மீடியா மோகத்தால் வீழ்த்தப்படும் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது.. முள்மீது சேலைப்பட்டாலும் சேலை மீது முள்பட்டாலும் முதல் ஆபத்து சேலைக்கு தான் என்பதை நெத்தியடியாக சொல்லி இருக்கிறார்..
பெண்களின் பாதுகாப்பு.. பெண்கள் மீதான வன்முறை ஆகியவற்றை சொல்ல இவ்வளவு கவர்ச்சி தேவையா? இதை குடும்பத்துடன் ரசிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.. ஆனால் பெண்கள் தங்கள் தோழிகளுடன் நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்..
இளசுகளை சூடேற்றும் வகையில் நாம் ஹோமிலியாக ரசித்த ரக்க்ஷிதா சாந்தினி சாக்க்ஷி ஆகியோரை கிளாமர் குயின்களாக காட்டியிருக்கிறார்.. ஒரு பக்கம் சமூகத்திற்கு சூடு வைத்தாலும் இளசுகளுக்கும் மூடு வைத்திருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே..
வன்முறை படங்கள் போதை படங்கள் காதல் படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்புடன் கவர்ச்சி கலந்து கமர்சியலுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜே எஸ் கே.
இவரே தயாரிப்பாளர் – இயக்குனர் என்றாலும் தனக்காக காட்சிகளை அதிகம் வைக்காமல் அலட்டிக் கொள்ளாமல் எதார்த்த போலீசாக அடம்பிடித்து நடித்திருக்கிறார் ஜே எஸ் கே..
சட்டம் கையில் இருந்தாலும் சட்டத்தை மீறிய சில சம்பவங்கள் நடைபெறும் நிலையில் அதற்கு சட்டம் மட்டும் பொறுப்பாகாது.. சில அதிரடியான தரமான சம்பவங்களும் தேவை என்பதை கருத்தாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
Fire movie set to Release on 14/02/2025
Fire Tamil movie review


