விடாமுயற்சி விமர்சனம்…

விடாமுயற்சி விமர்சனம்…

 

விடாமுயற்சி விமர்சனம்…

 

ஸ்டோரி…

அஜர்பைஜான் நாட்டில் தன் மனைவி த்ரிஷாவுடன் வசித்து வருகிறார் அஜித்.. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் 12 வருடங்களுக்குப் பிறகு பிரிகின்றனர்.. அப்போது தனது அம்மா வீட்டிற்கு செல்ல ஆசைப்படுகிறார் த்ரிஷா.. உன்னை நான் வீட்டில் ட்ராப் செய்கிறேன் என்று அஜித் ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் காரில் அழைத்து செல்கிறார்.. அப்போது எதிர்பாராத விதமாக இவர்களின் கார் ரிப்பேர் ஆகிறது.

அந்த சமயத்தில் அதே நாட்டில் வசிக்கும் தமிழர்களான அர்ஜுன் மற்றும் அவரது மனைவி ரெஜினா இருவரும் இவர்களுக்கு உதவி செய்ய முன் வருகின்றனர்.

அப்போது தன் மனைவி த்ரிஷாவை அவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு காரை ரிப்பேர் செய்து வருகிறேன் என்கிறார் அஜித்.. ஆனால் அதன் பிறகு தான் தன் மனைவி அர்ஜுன் மூலம் கடத்தப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

அர்ஜுன்& ரெஜினா யார் அவர்கள் த்ரிஷாவை கடத்த காரணம் என்ன.? அந்த நாட்டில் அஜித் மனைவியை காப்பாற்றினார்? அல்லது விவகாரத்து செய்ய போகும் மனைவியை கைவிட்டு விட்டாரா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

க்ளீன் செய்யப்பட்ட முகத்துடன் ஹாலிவுட் ஹீரோ போல இளமையாக காட்சி அளிக்கிறார் அஜித்.. வயதான தோற்றத்தில் நரைத்த முடி நரைத்து தாடியுடன் அதிலும் ஸ்டைலிஷ் ஆக காணப்படுகிறார் அஜித்.

இடைவேளை முன்பு வரை தன் மனைவிக்காக பரிதவிக்கும் அஜித் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளை அசத்தியிருக்கிறார்.. கொஞ்ச நேரமே வந்தாலும் பாலைவனத்தில் பூத்த மலராக பளிச்சிடுகிறார் திரிஷா.. கணவனை விட்டு வேறொருடன் காதல் கொள்வதும் அதனால் விவகாரத்தை கேட்பதை ஏற்று கொண்டாலும் அவர் யார் என்ற கேள்விக்கு விடை இல்லை..

கடத்தல் வில்லனாக ஆக்ஷன் கிங் வந்தாலும் படத்தில் செகண்ட் ஹீரோ போலவே அசத்தியிருக்கிறார் அர்ஜூன்.. அவரது கலரிங் செய்யப்பட்ட ஹேர் ஸ்டைலும் ரசிக்க வைக்கிறது.. ரெஜினா கசாண்ட்ராவும் ஆக்ஷனிலும் அழகிலும் ரசிகர்களை கவர்கிறார்..

மிரட்டல் ஆன தோற்றத்தில் முரட்டு இளைஞராக அசத்தியிருக்கிறார் ஆரவ்..

ரம்யா சுப்ரமணியம், ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் உள்ளிட்டோரும் உண்டு.. முதல் பாதியில் விறுவிறுப்பு குறைவு.. அதற்கு சில காமெடி காட்சிகளை சேர்த்து இருந்தால் படத்தின் கலகலப்புக்கு உதவி இருக்கும்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.. அஜர்பைஜான் நாட்டிற்கு பாஸ்போர்ட் இல்லாமல் அழைத்துச் செல்கிறார்.. அந்த நாட்டின் கேட்பாரற்று கிடைக்கும் வெறிச்சோடிய சாலைகளையும் ஆபத்தையும் கேமராவில் பதிவு செய்திருக்கிறார்..

இடைவேளைக்கு முன்பு வரை கலை இயக்குனருக்கு வேலை இல்லை.. இரண்டாம் பாதியில் கலை இயக்குனர் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்

அனிருத்தின் இசையில் பாடல்கள் செம… பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் இன்னும் மெனக்கட்டு இருக்கலாமோ அனிருத் ப்ரோ..

படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்.. இடைவேளைக்கு முன்பு உள்ள காட்சிகளை ட்ரிம் செய்து விறுவிறுப்பு கூட்டி இருக்கலாம்..

சுப்ரீம் சுந்தர சண்டை காட்சிகளை அனல் பறக்க ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து அளித்திருக்கிறார்..

என்னதான் தன் மனைவி விவாகரத்து கேட்டாலும் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும் என்பதற்காக அஜித் மெனக்கெடும் காட்சிகள் கணவனின் அன்பை காட்டி இருக்கிறது..

ஒரே நாளில் நகரும் கதையை விறுவிறுப்பாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி.. அதே சமயம் அஜித் திரிஷாவின் இளமைக் காலக் காட்சிகள் பிப்ரவரி மாத ஸ்பெஷல்..

திரிஷாவின் கடத்தலுக்கு யார் காரணம் அர்ஜுன் யார் ரெஜினா யார் என்ற காட்சிகளை கிளைமாக்ஸ் இல் விறுவிறுப்புடன் திருப்பங்களுடன் சொல்லி அஜித் ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார் மகிழ்(ச்சி) திருமேனி..

Vidaamuyarchi movie review

—–