‘ரிங் ரிங்’ விமர்சனம்.. சீக்ரெட் அலர்ட்
‘ரிங் ரிங்’ விமர்சனம்.. சீக்ரெட் அலர்ட்
நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்.. காதலர்களாக இருந்தாலும்.. கணவன் மனைவியாக இருந்தாலும்.. பெற்றவர் பிள்ளையாக இருந்தாலும் எந்த உறவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் பகிரப்படாத ரகசியம் இருக்கும்..
அது அவர்களின் ஆழ்மனதில் எப்போதும் ஒளிந்து கிடக்கும்… அவர்களைப் புரிந்து கொள்வது எளிதல்ல.. இந்த கருவை மையப்படுத்தி உருவாகிய படம் ‘ரிங் ரிங்..’
ஸ்டோரி…
நாலு ஜோடிகள்.. : 1) விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, 2) டேனியல் அன்னி போப் – ஜமுனா, 3) பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால், 4) அர்ஜுனன் – சஹானா
இவர்கள் நான்கு பேர் நண்பர்கள்.. இவர்களின் வாழ்க்கை சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.. இந்த சூழ்நிலையில் இந்த நான்கு ஜோடிகளும் ஒரு விபரீத விளையாட்டுக்கு தயாராகின்றனர்.. அதாவது அவர்களுக்கு யாராவது போன் அழைத்தால் அவர்கள் அதை ஒளிந்து மறைந்து பேசாமல் அடுத்தவர்கள் மத்தியில் ஸ்பீக்கர் போட்டு கேட்க வேண்டும் என்பதுதான் அந்த விளையாட்டின் விதிமுறை.
அப்படியான சூழ்நிலையில் அவர்களுக்கு வரும் போன் கால்கள் பல விரிசல்களை ஏற்படுத்துகிறது.. அவர்கள் மறைத்த ரகசியங்கள் வெளிப்படுகிறது.. இதுவரை நெருங்கிய உறவு என கருதப்பட்ட ஜோடிகளிடையே சந்தேகம் பிரச்சனை எழுகிறது.
இந்த விளையாட்டுக்கு முடிவென்ன? அதன் பிறகு நடந்தது என்ன? ஜோடிகள் பிரிந்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
தியாகு பாத்திரத்தில் விவேக் பிரசன்னா, பூஜாவாக சாக்ஷி அகர்வால், கதிராக டேனியல், சிவாவாக பிரவீன் ராஜா, அர்ஜுனாக அர்ஜுனன், சுயமாக ஸ்வயம் சித்தா, இந்துவாக சஹானா, ஜமுனாவாக ஜமுனா என நடித்திருக்கிறார்கள்.
விவேக் பிரசன்னா – ஸ்வயம் ஜோடி படத்தில் அதிகளவில் ஸ்கோர் செய்துள்ளனர்.. போட்டி போட்டுக் கொண்டு எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்..
அடுத்த பெண்ணுடனான தொடர்பு தெரிந்து காதலியிடம் சிக்கும் டேனியல் செம நடிப்பு..
பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வால்.. இவர்களின் டயலாக்கும் இவர்களுக்குள் ஏற்படும் டவுட்டும் ரசிக்க வைக்கிறது..
அர்ஜுனன் – சஹானா ஜோடியும் நன்றாகவே நடிப்பில் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்..
உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் காட்ட அதிக உரையாடல்களை பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.. ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் டிவி சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது…

டெக்னீசியன்ஸ்…
சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார்.. ஒளிப்பதிவு – பிரசாந்த்.. இசை – வசந்த் இசைப்பேட்டை, எடிட்டிங் – பிகே, கலை இயக்கம் – தினேஷ் மோகன், பாடல்கள் பா. ஹரிஹரன், தயாரிப்பு – ஜெகன் நாராயணன்..
காட்சிகளை கண்களில் கடத்த கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரசாந்த்.. உணர்வுகளுக்கு இசை மூலம் உயிரூட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டை… ‘அழகான நேரங்கள்.. ‘ பாடல் வரிகளும் பாடலும் மனதில் இடம் பிடிக்கும்..
வழக்கமான வில்லத்தனம் செய்யும் வில்லன் வில்லிகளை காட்டாமல் சூழ்நிலையும் அதற்கான திரைக்கதையும் அமைத்து படத்திற்கு சுவாரசியம் கொடுத்திருக்கிறார் டைரக்டர் சக்திவேல்.
ஜோடிகளின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும்போது அடுத்தது எவர் மாட்டிக் கொள்வார் என்ற பரபரப்பை ரசிகர்கள் மனதில் விதைக்கிறார்..
இந்த ரிங் ரிங் படத்தை பார்த்த பிறகு தோழன் – தோழி, காதலன் – காதலி, கணவன் – மனைவி, அப்பா – அம்மா ஆகியோரிடம் ரகசியங்களை மறைத்து வைத்து ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை அலாரம் கொடுக்கும்..
Ring Ring movie review

