ராஜ பீமா விமர்சனம்…

ராஜ பீமா விமர்சனம்…

 

 

ராஜ பீமா விமர்சனம்…

ஸ்டோரி…

நரேஷ் சம்பத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ராஜ பீமா’.

சிறுவன் ராஜா.. ஒரு கட்டத்தில் இவருக்கு ஒரு குட்டி யானையுடன் தொடர்பு ஏற்படவே அதற்கு ‘பீமா’ என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் அந்த யானை வளர்ந்து பெரிய உருவமாகிவிட்ட நிலையில் ஒருநாள் யானைக்கு மதம் பிடித்து விட்டதாக அதனை வனத்துறை அதிகாரிகள் சிகிச்சை முகாமுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.

ஆனால் அந்த யானை அங்கு இல்லை என்பது நாயகனுக்கு தெரிய வருகிறது.. அதன் பிறகு நாயகன் என்ன செய்தார்.? யானை என்ன ஆனது.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாயகனாக ‘பிக் பாஸ்’ ஆரவ் நடித்திருக்கிறார்.. ரொமான்ஸிலும் ஆக்ஷனிலும் தேக பலம் காட்டி இளசுகளை கவர்கிறார்..

ஜோதிடத்தை கண்மூடித்தனமாக நம்பும் அமைச்சர் வேடத்தில் கேஎஸ் ரவிக்குமார்.. முதலமைச்சராகுவதற்கு இவர் போடும் ஸ்கெட்ச் பலே ரகம்..

நாயகியாக ஆஷிகா.. நாயகனுடன் காதல் செய்வது தான் இவர் வேலை..

ஓவியா சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்து , ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார்..

இந்த காலத்துல யோகி பாபு இல்லாத படமா.? என்ற கேள்வி எழும்.. அவருக்காக ஒரு கேரக்டரையும் வைத்திருக்கிறார் இயக்குனர்.. பொள்ளாச்சியின் பிரதமராக அரசியல்வாதியின் வளர்ப்பு மகனாக கொஞ்சம் கலகலப்புக்கு உதவி செய்திருக்கிறார் யோகி பாபு.

எந்த சீசனிலும் என் கிளாமருக்கு பஞ்சம் இருக்காது என தாரளமாக வழங்கி இருக்கிறார் யாஷிகா ஆனந்த்..

இவர்களுடன் நாசர், அருவி மதன், ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ், சாயாஜி உள்ளிட்டோரும் உண்டு.. பீமாவாக நடித்திருக்கும் யானையின் நடிப்பும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது..

டெக்னீசியன்ஸ்…

எஸ்.மோகன் தயாரிக்கும் இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கி இருக்கிறார்.. ஒளிப்பதிவு எந்த குறையும் இல்லை..

சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.. பின்னணி இசையும் பாடல்களும் ஓகே ரகம்..

மனிதன் விலங்கு இடையே ஏற்படும் பாசம் & ஜோதிட மூடநம்பிக்கை உள்ளிட்ட கமர்சியல் ஐட்டங்களை கலந்து கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருக்கின்றனர்.

இந்த வாரம் ஜனவரி 31ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது..

Rajabheema movie review