மதகஜ ராஜா (MGR) விமர்சனம் 3.25/5… Makkalae Galattavuku Readya.?

மதகஜ ராஜா (MGR) விமர்சனம் 3.25/5… Makkalae Galattavuku Readya.?

மதகஜராஜா (MGR) விமர்சனம் 3.25/5… Makkalae Galattavuku Readya.?

ஸ்டோரி…

நாயகன் விஷாலுக்கு சந்தானம் உள்ளிட்ட மூன்று நண்பர்கள்.. இவர்கள் ஒரு திருமண விழாவில் சந்திக்கின்றனர்.. அப்பொழுது ஜாலியாக இல்லாமல் நண்பர்கள் அனைவரும் ஏதோ ஒரு பிரச்சனை சிக்கி இருப்பதை அறிகின்றார்.. இந்த மூவரின் பிரச்சினைக்கு ஒரே காரணம் வில்லன் சோனு சூட்.. பணம் பதவி மீடியா என மூன்றையும் கையில் வைத்திருக்கும் வில்லன் சோனுவை எதிர்க்க போராடுகிறார் விஷால்..

அதன் பிறகு நடப்பதெல்லாம் மீதிக்கதை.. அரசியல் செல்வாக்கு உள்ள வில்லனை எதிர்த்து விஷால் வெற்றி பெற்றாரா? நண்பர்களின் பிரச்சனை தீர்ந்ததா.? என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த கதைதானே.. (ஹா ஹா.. ஹிஹா..)?!?

இடையில் மானே தேனே என்று தொட்டுக்கொள்ள நாயகிகள் அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகிய இருவரையும் ஊறுகாயாக வைத்திருக்கிறார் டைரக்டர் சுந்தர் சி.

 

கேரக்டர்ஸ்…

12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா என்பதால் இளமைத் துள்ளலுடன் அதிரடி ஆக்ஷனில் அதகளம் செய்திருக்கிறார் விஷால்.. கிளைமாக்ஸ் இல் சோனுக்கு நிகராக சிக்ஸ்பேக் வைத்து ஆக்ஷனிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் விஷால்..

கூடவே வரலட்சுமி & அஞ்சலி என இளமை ததும்பு நாயகிகள்.. ஆட்டம் போட்டு ரசிகர்களை மார்கழி குளிரில் சூடேற்றி இருக்கிறார்.. நடிப்பை விட கவர்ச்சியை வாரி வழங்கி இருக்கின்றனர் இரண்டு அழகு ஹீரோயின்ஸ்..

மேலும் விஜய் ஆண்டனி இசையில் ஒரு பாடலை பாடி கொஞ்சம் கடுப்பேற்றி இருக்கிறார் விஷால்..

காமெடியில் கொடிகட்டி பறந்த சந்தானத்தின் காலகட்டம் அது.. ரசிக்க ரசிக்க சிரிக்க சிரிக்க காமெடியில் மணக்க விட்டிருக்கிறார்.. இவருக்கு ஏற்ற கதைகளத்தில் மனோபாலா லொள்ளுசபா மனோகர் சுவாமிநாதன் ஆகியோரும் உண்டு.. காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கின்றனர்..

அதுவும் மனோபாலா மரணத்திற்கு பிறகும் வரும் காட்சிகள் மரண காமெடியில் உச்சம்..

டெக்னீசியன்ஸ்…

MGR – மக்களே காமெடி கலாட்டாவுக்கு ரெடியா என்றால் இந்த படத்தில் குடும்பத்துடன் வாங்க என கேரண்டி கொடுத்திருக்கிறார் டைரக்டர் சுந்தர் சி.. விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம்.. விஷால் பாடிய பாட்டு பாடல் வரிகளும் நன்றாக இருந்தாலும் அவரின் குரல் செட்டாகவில்லை..

ரிச்சர்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்.. ஆனால் எடிட்டர் சுந்தர் சி பட பாணியை கைவிட்டு இருக்கலாம்.. கலகலப்பு ஆம்பள உள்ளிட்ட அனைத்து படங்களில் ஒரே மாதிரியான எடிட்டிங் வருவது போரடிக்கிறது.

ஆக இந்த மத கஜராஜாவில் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்க வேண்டாம்.. காமெடி மேஜிக் இருக்கு… வாங்க சிரிச்சிட்டு போங்க.. சந்தோஷமா பொங்கலை கொண்டாடுங்கள் என என அழைப்பு விடுத்திருக்கிறார் சுந்தர் சி..

Madha Gaja Raja movie review