MISS YOU விமர்சனம்..

MISS YOU விமர்சனம்..

 

MISS YOU விமர்சனம்..

ஸ்டோரி…

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என முயற்சிக்கிறார் சித்தார்த். ஒரு நாள் நடந்த விபத்தில் 2 வருடங்களின் நினைவுகளை மறந்து விடுகிறார்.. பின்பு ஒரு நாள் பெங்களூரு செல்லும் போது ஆஷிகா ரங்கநாத்தைப் பார்த்ததும் காதல் கொள்கிறார்.

ஆஷிகாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அம்மாவிடம் ஆஷிகா போட்டோ காட்டி அனுமதி கேட்கிறார்.. போட்டோ பார்த்ததும் அம்மாவுக்கு அதிர்ச்சி.

காரணம் விபத்துக்கு முன் ஆஷிகாதான் சித்தார்த்தின் மனைவி என்ற உண்மையைச் சொல்கிறார் அம்மா.

அதன்பின் என்ன நடந்தது.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

எவர் க்ரீன் ஸ்மார்ட் ஹீரோ சித்தார்த்.. நடிப்பிலும் செம ஸ்மார்ட்.. ரொமான்ஸ் இவருக்கு கை வந்த கலை..

திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என ஆஷிகா நடிப்பில் செம மெச்சூரிட்டி.. அனுதாபத்தை அள்ளி கொள்கிறார் ஆஷிகா..

சித்தார்த் அம்மாவாக அனுபமா குமார். அப்பா ஜெயப்பிரகாஷ்.. ஆஷிகாவின் அப்பாவாக பொன்வண்ணன்… ஆகியோரும் உண்டு.. அனுபவ நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர்..

சித்தார்த் நண்பர்களாக கருணாகரன், பாலசரவணன், மாறன் ஆகியோரும் உண்டு.. கருணாகரனின் டைமிங் காமெடி ரசிக்க வைக்கும் ரகம்..

இசை : ஜிப்ரான்.. இதமான இசை பலம் சேர்க்கிறது.. கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சென்னை மற்றும் பெங்களூர் காட்சிகள் அழகு..

ரொமான்ஸ்.. லவ்.. பேமிலி சென்டிமென்ட் என முடிந்தவரை படத்தை சுவாரசியமாக கொடுக்க முயன்றிருக்கிறார் டைரக்டர் ராஜசேகர்.. இன்னும் சில அழுத்தமான, செண்டிமெண்ட் சீன்ஸ் இருந்திருந்தால் மிஸ் யூ படத்தை ரசிகர்கள் மிஸ் செய்ய மாட்டார்கள்..

Miss You movie review