தென் சென்னை விமர்சனம்.. தென்றல் சென்னை

தென் சென்னை விமர்சனம்.. தென்றல் சென்னை

 

 

தென் சென்னை விமர்சனம்.. தென்றல் சென்னை

 

தென் சென்னை தலைப்பிலேயே என்ன கதை என்பது தெளிவாகிறது.. வடசென்னை பற்றி பல படங்கள் வந்த போதிலும் இது தென் சென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.. அறிமுக இயக்குநர் ரங்கா இயக்கி தயாரித்து நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகி உள்ளது..

 

 

ஸ்டோரி…

சென்னைக்கு பிழைப்புத் தேடி வருகிறார் தேவராஜன்.. தன் கடுமையான உழைப்பால் தனக்குத் தெரிந்த தொழிலை செய்து ஒரு பெரிய ஹோட்டலை உருவாக்குகிறார்.. மதுரையில் தனக்கு பழக்கமானவர்களை அழைத்து வந்து கடையில் வேலை கொடுத்து வியாபாரத்தை பெருக்கி அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் தன் தாத்தாவிற்கு பிறகு ஹோட்டல் நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கிறார் பேரன் ரங்கா..

இந்த சூழ்நிலையில் ஒயின் ஷாப் பிரச்சினையில் வில்லனுக்கும் நாயகனுக்கும் மோதல் ஏற்படுகிறது. ஹோட்டலும் வில்லன் கைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.. அதன் பிறகு என்ன ஆனது.?

அதே நேரத்தில் ஒரு குழந்தையை நாயகன் ரோட்டில் கண்டெடுக்க அதன் மூலம் நாயகியை சந்திக்கிறார். யாருடைய குழந்தை..? ஹோட்டல் தொழில் என்ன ஆனது.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ரங்கா – ஜேசன்
ரியா – மேகா
இளங்கோ குமணன் – டோனி (மாமா)
சுமா – மரியா (கநாயகன் தாய்)
தாரணி – தாரா (நாயகன் அக்கா)
நிதின் மேஹ்தா – ருத்ரா (வில்லன் 1)
திலீபன் – சிவக்குமார் (இன்ஸ்பெக்டர்)
தன்ஷிவி, நித்யநாதன் – கிருஷ்ணா (குழந்தை)
வத்ஷன் எம் நட்ராஜன் – எஸ் கே (வில்லன் 2)

தென் சென்னையில் நடக்கும் கதை.. அதற்கு ஏற்ப தன் கேரக்டர் உடல் மொழியை கொடுத்து சிறப்பான நடிப்பை முதல் படத்திலேயே வெளிப்படுத்தி இருக்கிறார் ரங்கா..

மருத்துவராக ரியா… அவரின் அழகும் நடிப்பும் ரசிகர்களை கவரும்.. முன்னாள் ராணுவ அதிகாரியாக நிதின் மேத்தா.. இவரது தோற்றமே மிரட்டல் தான்.. எனவே தன் வில்லன் கேரக்டரை நேர்த்தியாக செய்து இருக்கிறார்..

இளங்கோ குமரனுக்கு சின்ன வேடமே.. இவர்களுடன் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன் உள்ளிட்டோரம் நடிப்பில் கவர்கின்றனர்..

 

டெக்னீசியன்ஸ்…

எழுத்து & இயக்கம் : ரங்கா
ஒளிப்பதிவாளர்: சரத்குமார் எம்
எடிட்டிங் தொகுப்பாளர்: இளங்கோவன் சி எம்
பின்னணி இசை : ஜென் மார்டின்
பாடல் இசை : சிவ பத்மயன்
பாடல் : ரங்கா
பாடியவர் : நரேஷ் ஐயர்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : மாரிமுத்து
வண்ணம் – சிட்டகாங்
தயாரிப்பாளர்: ரங்கா ஃபிலிம் கம்பனி
மக்கள் தொடர்பு – ஹேமானந்த்

சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. சின்ன படத்தை தாண்டிய பட்ஜெட் காட்சிகளில் தெரிகிறது..

படத்திற்கு தெறியான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் ‘டாடா’ படத்துக்கு இசையமைத்த ஜென் மார்டின். சிவ பத்மயன் இசையில் பாடல்கள் இனிமை.

ஒளிப்பதிவாளர் சரத்குமார் தன் கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை அழகுப்படுத்தி இருக்கிறார்..

திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி திருப்புமுனை காட்சிகள் வைத்திருந்தால் இந்த தென் சென்னை அனைத்து மக்களின் படமாக அமைந்திருக்கும்.. ஆனால் முதல் முயற்சியிலேயே புதுமுக நடிகர்களை வைத்து தென் சென்னையை தென்றலாக கொடுத்திருக்கும் இயக்குனர் ரங்காவை பாராட்டலாம்..

Then Chennai movie review