அன்றே சொன்னார்.. அப்பவே சொன்னார்..; அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

அன்றே சொன்னார்.. அப்பவே சொன்னார்..; அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

 

 

அன்றே சொன்னார்.. அப்பவே சொன்னார்..; அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

 

சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் “திராவிடமே தமிழுக்கு அரண்” என்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசினார் நடிகர் சத்யராஜ் .

அப்போது பேசிய அவர், “நான் 15 வயது இருக்கும் போது கலைஞரின் பராசக்தி வசனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்தது.

ஈழ விடுதலைக்கு உத்வேகம் கொடுத்தது திராவிட இயக்கங்கள்தான்..

தமிழ் தேசியம் ஆரியதைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல” என பேசினார்.

மேலும்… நடிகர் அஜித் பைக் டூர் போகும்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.. அது பற்றியும் நடிகர் சத்யராஜ் பேசியிருந்தார்.

அந்த பதிவில்..

ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். அவரிடம் எந்த சண்டையும் கிடையாது..

சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனை கோபம் வருகிறது என்றால், அதற்கு காரணம் மதம். . மதம்தான் தேவையில்லாமல் வெறுப்பை உருவாக்குகிறது என சொன்ன அஜித்க்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார் சத்யராஜ்..

தேவா இசையில் ரமேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் அஜித் இருவரும் ‘பகைவன்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathyraj appreciation about Ajith statement in religion