சினிமாவின் அரசியல்.. அரசியலின் சினிமா.; தெளிவான ரஜினி.. – வைரமுத்து 

சினிமாவின் அரசியல்.. அரசியலின் சினிமா.; தெளிவான ரஜினி.. – வைரமுத்து 

 

 

சினிமாவின் அரசியல்.. அரசியலின் சினிமா.; தெளிவானவர் ரஜினி.. – வைரமுத்து

 

 

நடிகர் எம்ஜிஆருக்கு ஏற்ற பாடல் ஆசிரியர் என்றால் கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலியை சொல்லலாம். அதுபோல நடிகர் ரஜினிகாந்த் ஏற்ற பாடல் வரிகளை எழுதியவர் என்றால் அது வைரமுத்து என்ற சொல்லலாம்.

இவர்களின் கூட்டணி இன்றுவரை தொடர்கிறது.. இந்த நிலையில் இன்று நவம்பர் 9ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இவர்கள் சந்திப்பு குறித்து வைரமுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்

அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்

ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை

சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் – சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன

எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது

தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது

நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை

தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்

நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்

ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்

இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு

அது இது

@rajinikanth | #ரஜினிகாந்த்

Vairamuthu met Rajini and shared his thoughts

 

 

 

Related articles