‘இட்லி கடை’ திறக்கும் தேதி சொன்ன தனுஷ்..: சுடச்சுட FDFS.-ல் சுவைக்க ரெடியா.?
‘இட்லி கடை’ திறக்கும் தேதி சொன்ன தனுஷ்..: சுடச்சுட FDFS.-ல் சுவைக்க ரெடியா.?
‘ப. பாண்டி’ படத்தை தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘ராயன்’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் தனுஷ்.
இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது..
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கும் நான்காவது படமாக ‘இட்லி கடை’ திரைப்படம் உருவாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் தனுஷ் & நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர்.. இவர்கள் இருவரும் இதற்கு முன்பு இணைந்த திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்காக நித்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று இருந்தார்.
தற்போது ‘இட்லி கடை’ படத்திற்கு
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார்..
இப்படம் அடுத்தாண்டு 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுக்குறித்த போஸ்டரில் தனுஷ் சிவனேசன் இட்லி கடை என்ற கடைக்குள் செல்வது போல் டிசைன் அமைந்துள்ளது.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர்..
Idly kadai movie release on 10th April 2025

