ஏற்கனவே 2 ‘சண்டியர்’ வந்திருந்தாலும் கமல்ஹாசனை மீண்டும் எச்சரிக்கும் கிருஷ்ணசாமி

 

ஏற்கனவே 2 ‘சண்டியர்’ வந்திருந்தாலும் கமல்ஹாசனை மீண்டும் எச்சரிக்கும் கிருஷ்ணசாமி

 

சுமார் 22 வருடங்களுக்கு முன்பு (2004) இளையராஜா இசையில் கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் ‘விருமாண்டி’. ஆனால் இந்த படத்திற்கு முதலில் சண்டியர் என்ற தலைப்பில் வைத்திருந்தார் கமல் அப்போது புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி இந்த தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்..

எனவே வேறு வழியின்றி கமல்ஹாசன் தலைப்பை விருமாண்டி என மாற்றி இருந்தார்..

அப்போது கமல் ரசிகர்கள் பலரும் கிருஷ்ணசாமியை எதிர்த்து போராட தயாராக இருந்தனர்.. ஆனால் கமல்ஹாசன் இது என் பிரச்சனை.. நீங்கள் குடும்பத்தை பாருங்கள் என அந்த போராட்டத்தை தவிர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஆனால் இதே சண்டியர் என்ற படத் தலைப்பில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு படம் வெளியாகி உள்ளது.. ஒரு படத்தில் பிரேம் மற்றும் குஷ்பு இணைந்து நடித்திருந்தனர்.. வாராரு சண்டியர் என தலைப்பு வைத்திருந்தார்..

இந்த நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டில் சண்டியர் என்ற தலைப்பில் மீண்டும் நடிக்க உள்ளார் கமல்ஹாசன் இந்த படத்தை அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.. வீரன் தீரன் சூரன் படத்தை இயக்கிய அருண் இயக்குகிறார்..

நேற்று நவம்பர் 7ஆம் தேதி கமல் பிறந்தநாளில் இந்த படத்தின் பூஜை உடன் ஷூட்டிங் தொடங்கப்பட்டது… இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது மீண்டும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி…

‘சண்டியர்’ படத்தை கமல்ஹாசன் வெளியிடக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கோவை பேட்டியில்: “ரத்தம் சொட்ட சொட்ட ஒரு விளம்பரத்தை வெளியிட்டு ‘சண்டியர்’ படம் குறித்து கமல் அறிவித்துள்ளார். பிறந்த நாளில் ‘பழிக்கு பழி’ வாங்கும் வகையில் கமல் ஆரம்பித்துள்ளார்…

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்துள்ளார். கமல்ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்.

எம்பியாக உள்ள கமல், சாதி மற்றும் மதம் சார்ந்து செயல்படக் கூடாது. தான் எடுத்த உறுதிமொழிக்கு மாறாக அவர் செயல்படுகிறார். ‘சண்டியர்’ படத்தை கமல் எடுக்கவும் முடியாது, அதைத் தமிழ்நாட்டில் திரையிடவும் முடியாது. யாரோ சிலரின் தூண்டுதலின் பே பேரில்தான் சண்டியர் படத்தை அவர் அறிவித்துள்ளார். அந்தப் படத்தை அவர் எடுக்கக் கூடாது..

உள்நோக்கத்துடனேயே அவர் அனைத்து விஷயங்களையும் செய்கிறார். கமல் சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு பொறுப்பற்ற நடிகர். கமல்ஹாசன் ஏற்கனவே நடித்த ‘தேவர் மகன்’ திரைப்படத்தால் தென் தமிழகத்தில் இன்றும் அமைதியின்மை நிலவுகிறது..

சண்டியர் படம் வெளிவந்தால் கடந்த காலங்களை விட தற்போது நிலைமை மேலும் மோசமாகும். எனவே ‘சண்டியர்’ என்ற தலைப்பிற்குத் திரைத்துறையினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி சு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது..

 

Again Kamal titled his movie as Sandiyar Again Political Party Leader oppose title

 

கூடுதல் தகவல்…

ஏற்கனவே சண்டியர் என்ற பெயரில் இரண்டு படங்கள் வந்திருந்தாலும் அந்த படங்களை எதிர்க்காமல் இந்த படத்தை (கமல் நடிக்கும் சண்டியர்) மட்டும் கிருஷ்ணசாமி எதிர்க்க என்ன காரணம் என அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது.. அதற்கு அவர் பதில் சொல்லும் போது….

சண்டியர் என்ற நீங்கள் சொன்ன படங்கள் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது.. ஆனால் கமல்ஹாசன் என்பவருக்கு ஒரு பெயர் இருக்கிறது.. அவர் ஒரு பிராண்ட் அவர் நடித்து வெளியே வந்தால் அந்த பெயர் வெளியே தெரியும்..

ஒரு விளம்பரம் என்றால் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் முன்னணி நட்சத்திரங்கள் வைத்து தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்… அதுதான் மக்களிடம் வரவேற்பு பெரும்… அதுபோல கமல்ஹாசன் படம் சண்டியர் என்ற தலைப்பை வெளியே கொண்டு வருவதால் பிரச்சனை உருவாகும் என்பதால் அவர் படத்தை எதிர்க்கிறோம்” என பதில் அளித்துள்ளார் கிருஷ்ணசாமி..

 

 

 

——