நாசர் – ரெஜினா – ஸ்ரீஜா ரவி இணைந்த Rx படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்

 

நாசர் – ரெஜினா – ஸ்ரீஜா ரவி இணைந்த Rx படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து புதிய படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தை “சில நேரங்களில் சில மனிதர்கள்” மற்றும் “பாம்” படங்களின் இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் நடிக்க ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்தப்படத்துக்கு “ஆர்எக்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு இன்று அறிவித்துள்ளது.

ஆர்எக்ஸ் (Rx) என்பது மருத்துவத் துறையில் மருத்துவரால் வழங்கப்படும் மருத்துவக் குறிப்பு அல்லது மருந்துச் சீட்டைக் குறிக்கும் எழுத்துகளாகக் கருதப்படுகின்றன.

இப்படத்துக்கு நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரும் கவனம் பெற்ற “கார்கி” படத்தின் எழுத்தாளர் ஹரிஹரன் ராஜு திரைக்கதை எழுதியுள்ளார்..

 

Lokesh Kanagaraj next production Movie titled Rx