Don’t Trouble the Trouble விமர்சனம்… மோசமான பேய் இல்ல.. பாசமான பேய்

Don’t Trouble the Trouble விமர்சனம்… மோசமான பேய் இல்ல.. பாசமான பேய்

 

 

Don’t Trouble the Trouble விமர்சனம்… மோசமான பேய் இல்ல.. பாசமான பேய்

 

ஸ்டோரி…

கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார் நாயகன் பகத் பாசில்.. வில்லன் 2 நாள் கெடு விதித்திருக்கும் நிலையில் என்ன செய்வது என்று தவிக்கிறார்.. அப்போது இவர் மேஜிக் மேன் உடை அணிந்து இருப்பதால் இவரை மேஜிக் மேன் என நினைத்து ஒரு சிறுமி வரம் கேட்கிறாள்..

தான் செய்த ஒரு தவறான மேஜிக்கால் தன் பெற்றோர் மறைந்து விட்டதாகவும் அவர்களை மீட்டு தர வேண்டும் என கேட்கிறார்.. இந்த பணக்கார சிறுமியை கடத்தினால் பெற்றோரிடம் பணம் பறிக்கலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார் ஹீரோ பகத்.. ஏனென்றால் அந்த குழந்தை சிறுமியே அல்ல.. என்பதை சில மணி நேரங்களுக்கு பிறகு தெரிந்து கொள்கிறார்… அது ஒரு குட்டி பேய்…

ஒரு பேயை கடத்தி சிக்கலில் தவிக்கும் பகத் என்ன செய்தார் என்பதெல்லாம் யூகிக்க முடியாத நினைத்துப் பார்க்க முடியாத சுவாரஸ்யமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

தான் ஒரு மிகச்சிறந்த கலைஞன் என பல படங்களில் நிரூபித்தவர் பகத் பாஸில்.. இந்த படத்தில் ஹீரோயின் இல்லை. மாஸ் காட்சிகள் இல்லை ஆனால்.. ஒரு பேயை கடத்தி ஒரு வித்தியாசமான கதையை ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்.. கிளைமாக்ஸ் காட்சியில் உருக்கமான நடிப்பால் நம்மை அழ வைத்து விடுகிறார்..

அனுபவிக்க நடிகர் முன்னால் தன் திறமை மூலம் அசத்தியிருக்கிறார் பேபி சாரா.. கொஞ்சம் கோபம்.. நிறைய பாசம் என சபாஷ் பெறுகிறார்..

மகேஷ் மஞ்ரேக்கர், சவுரப் சச்தேவ், வெங்கடேஷ் காகமனு, சுப்புராஜூ, திவ்யா பிள்ளை, சஷாங்க் உள்ளிட்டோரின் கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது..

 

டெக்னீசியன்ஸ்…

பிராட் பிரன்சிஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் விருந்து.. பேய் காட்சியில் பயம் இல்லாமல் பார்க்க பரவசமான காட்சிகள் உண்டு..

கால பைரவா இசை படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.. பாடல்களும் வரிகளும் சிறப்பு..

வழக்கமான பேய் படம் டெம்பரேட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட காவியத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. அலறல் சப்தம் இல்லை.. இரைச்சல் இல்லை.. ஆனாலும் ஒரு கவித்துவமான பேய் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சஷாங்க் எலேட்டி…

 

Dont Trouble the Trouble movie review