நானி-யின் ‘தி பாரடைஸ்’ விமர்சனம்

நானி-யின் ‘தி பாரடைஸ்’ விமர்சனம்

 

நானி-யின் ‘தி பாரடைஸ்’ விமர்சனம்

 

ஸ்டோரி…

இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தாலும் இந்தியாவில் 1980 காலகட்டங்களில் சவாரி இன மக்களுக்கு இந்தியர்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்படவில்லை..

எனவே சவாரி இன மக்களில் ஒருவராக பிறக்கும் நானி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார்.. ஆனால் அதனை தடுக்கும் வில்லனிடம் இருந்து எப்படி தன் மக்களை மீட்டு இந்திய அரசு அங்கீகாரத்தை நானி பெற்றுத் தந்தார் என்பதுதான் மீதி திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

தன்னுடன் இரட்டை குழந்தையாக பிறந்த தங்கை இறந்து விட்டதால் பெண் குழந்தை போல ஜடையுடன் வருகிறார்.. எனவே தான் இவரை சடையன் என்று அழைக்கின்றனர்.. நானியும் அவரது அம்மாவும் சடையை தூக்கிப் போட்டு நடக்கும் ஸ்டைல் கெத்து..

சவாரி இன மக்களின் ஒருவராகவே நானி பயணித்தாலும் தோற்றத்திலும் உடல் மொழியிலும் மாறுபட்டு நிற்கிறார்.. அவரது ஹேர் ஸ்டைல் அனைத்துமே சவாரி இன மக்களுடன் ஒத்துழைக்க மறுப்பதால் நம்மாலும் ஒன்றி பயணிக்க முடியவில்லை..

ஹீரோயினாக கயாடு லோகர்.. கிட்டத்தட்ட நடிகையாக வருகிறார்.. கவர்ச்சியில் கிரங்கடிக்கிறார்.. ஓரளவு நடிக்கவும் முயற்சித்து இருக்கிறார்..

நானி அம்மாவாக சோனாலி குல்கர்னி, நண்பராக சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் சிறப்பு..

முக்கியமான கேரக்டரில் மோகன் பாபு… இவரது மாஸ் என்ட்ரி சூப்பர்.. ஒரு கட்டத்திற்குள் ஓய்வடைந்தாலும் பின்னர் மீண்டும் இவர் வெகுண்டு எழுந்து வருவது மோகன் பாபு ரசிகர்களுக்கும் மாஸ் ட்ரீட்..

 

டெக்னீசியன்ஸ்…

அனிருத் இசையில் பாடல்கள் சிறப்பான ஆட்டம் போட வைக்கிறது… ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் ஆட்டம் போட்டு ரசிக்க வைக்கிறார்.. ஆனால் எக்காலத்திற்கும் நிற்கும் இசை ஆகாது.. பிரம்மாண்ட காட்சிக்கு பிரம்மாண்ட கதைக்கு ஏற்ற இசையாக இருந்தாலும் பல இடங்களில் இசை இரைச்சல் காதை கிழிக்கிறது..

ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய்.. சவாரி இன மக்களின் வாழ்வியலை பிரம்மாண்டமாக பாரடைஸ் பேலஸ் போல காட்டியிருக்கிறார்.. ஆனால் அழுக்கு படிந்த தேகம் ரத்த கரையுடனே பல காட்சிகளை காண முடிகிறது..

படத்தொகுப்பாளர் நவீன் நூலி.. எடிட்டிங் பணியை சரியாக செய்து நீளத்தை நேரத்தை குறைத்து இருக்கலாம்..

ஸ்ரீகாந்த் ஓடெலா படத்தை இயக்கியிருக்கிறார்.. சுதந்திரம் அடைந்து 35+ வருடங்களுக்கு மேல் ஆகியும் சவாரி இன மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இந்தியர்களா வாழ முடியாமல் தவிக்கும் பரிதவிப்பை சொல்லி இருக்கிறார்..

அதே சமயம் ஒரு புரட்சி என்றால் பல உயிர்களை இழக்க நேரிடும் ரத்தம் பிணங்கள் இருக்கத்தான் செய்யும் பல காட்சிகளில் ரத்தம் முகத்தில் தெறீப்பது போலவே படமாக்கி இருக்கிறார்..

சடையன் கேரக்டரில் நானி மாஸ் காட்டியிருந்தாலும் ஒரு பாடல் அடுத்தது சண்டை சில வசனங்கள் மீண்டும் பாடல் ஃபைட் என ஒரே டெம்ப்ளேட் 3 மணி நேரம் வருவதால் அயற்சியைத் தருகிறது..

 

The Paradise movie review